முந்தானை முடிச்சு 2 படத்தின் இயக்குனர் இவர்தான்.. பாக்யராஜ் அளவுக்கு வருவாரா?

மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட்டாகும் படங்களின் ரீமேக் உரிமையை வாங்கி எடுத்தது போக தற்போது சொந்த மொழியிலேயே பழைய சூப்பர் ஹிட் படங்களின் உரிமையை வாங்கி ரீமேக் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ஆயிரம் நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த திரைப்படம்தான் முந்தானை முடிச்சு.

முந்தானை முடிச்சு படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவாக இருக்கும். ஊர்வசியின் தந்தை, பள்ளிக்கூடத்தில் வரும் மூன்று சிறுவர்கள் என காட்சிக்கு காட்சி சுவாரசியமாக உருவான திரைப்படம் முந்தானை முடிச்சு.

முந்தானை முடிச்சு படத்தில் இளையராஜாவின் இசையை பற்றி சொல்லி மாளாது. முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் எழுதி இயக்கி நடித்திருந்தார். பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய முந்தானை முடிச்சு படம் அன்றைய காலகட்டத்தில் அதிகம் வசூல் செய்த படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் தற்போது சசிகுமார் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி நடிக்க உள்ளார். மேலும் ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளாராம். என்னதான் நடிகர் நடிகைகள் மாறினாலும் முந்தானை முடிச்சு 2 படத்தின் இயக்குனர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

mundhanai-mudichu2-cinemapettai
mundhanai-mudichu2-cinemapettai

காரணம், பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தை பிசிறில்லாமல் தரமாக இயக்கியிருப்பார். இந்நிலையில் முந்தானை முடிச்சு 2 படத்தை சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்க உள்ளாராம்.

- Advertisement -