சின்ன படங்களை சிதைக்க வரும் மல்டி ஸ்டார் படங்கள்.. இப்படி சூதனமா இருந்தாதான் வசூல் வேட்டை ஆட முடியும்

தமிழ் சினிமாவில் நல்லதொரு மாற்றமாய் பல முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் போக்கு அதிகமாகி வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இது நல்லதோரு மாற்றம் என்று பல விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சமீபத்திய வெற்றிப்படங்களான விக்ரம், பொன்னியின் செல்வன்  போன்றவை மிகப்பெரும் வசூல் சாதனையை செய்தது. இந்த வெற்றி துவண்டு போயிருந்த தமிழ் தயாரிப்பாளர்களுக்கு நல்லதொரு டானிக் கொடுத்துள்ளது. ஆம் வெற்றி பெற நல்லதொரு யுக்தியை அவர்களுக்கு காட்சி படுத்தி உள்ளது.

மல்டி ஸ்டார்கள் ஒரே படத்தில் தோன்றி நடிப்பதால் அந்த படம் ஒரு மினிமம் கேரன்டியை பெறுகிறது என்றால் பொருத்தமாக இருக்கும். முன்னணி நாயகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் தோன்றுவது தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் ஹாலிவுட், பாலிவுட் மற்றும் மலையாள சினிமாவில் இது எதார்த்தம். குறிப்பாக மலையாளத்தில் பிரிதிவிராஜ், மம்மூட்டி, நிவின் பாலி போன்ற முன்னணி நடிகர்களே நல்ல கதாபாத்திரம் என்றால் ஹீரோவாக இல்லாவிட்டால் கூட நடிக்கிறார்கள். தமிழில் அப்படி ஒரு நிலைமை இல்லாமல் இருந்தது.

Also Read : அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் லோகேஷ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா? LCU-க்கு அடித்த ஜாக்பாட்

சமீபத்திய கொரோனாவால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே வீழ்ச்சி பாதையில் சென்றது. அதில் முதலில் சுதாரித்து எழுந்தது தமிழ் சினிமாதான். விக்ரம் பல கதவுகளை திறந்துவிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் ஆளுமைகளுள் ஒருவரான கமல்ஹாசன் எந்த வித ஈகோவும் இல்லாமல் விக்ரம் படத்தில் முதல் பாகத்தில் தனக்கு காட்சிகள் இல்லாதபோதும் நடித்தார். மேலும் பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோருடன் தனது கதாபாத்திரத்தை பகிர்ந்து கொண்டார். படமும் மாபெரும் வெற்றிபெற்றது.

அதுபோல விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி ஆகியோர் ஒன்றாக நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. இதன் மூலம் பல வருடங்களாக மாபெரும் வெற்றியை பதிவு செய்யாத மணிரத்னம், தன்னை இளம் இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்கினார்.

Also Read : தோல்வி பயத்தை காட்டிடாத நெல்சா.. ஜெயிலர் படத்தில் இறங்கிய அடுத்த பாலிவுட் நடிகர்

இவ்விரண்டு முன்னணி சினிமாப்புள்ளிகளின் வெற்றியால், நிறைய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களது படைப்புக்களை மல்டி ஸ்டார் படங்களாக மாற்றிவருகிறார்கள். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தும் ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோருடன் நடிக்கிறார். சுந்தர் சி, தனது கனவு படமான சங்கமித்ராவை தூசு தட்டுகிறார். இதுவும் ஒரு சரித்திர பல நடிகர்கள் கொண்ட கதை என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

தமிழ் சினிமாவில் மேலே சொன்ன இரண்டு படங்கள் பல கதவுகளை திறந்துவிட்டுள்ளது. அதனை நடிகர்கள் பயன்படுத்தி நடிக்கும்போது, அவர்களுக்குள் ஈகோவும் மறையும், படமும் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை. அஜித்தும், விஜய்யும் ஒன்றாக நடிப்பார்களா? என்று கேட்காதீர்கள். அந்த மாற்றம் அவர்கள் இருவரிடம் தான் தொடங்கப்பட வேண்டியது.

Also Read : தோல்வி பயத்தில் ரஜினி, வரிசை கட்டும் இத்தனை பேர் .. நீண்டு கொண்டே போகும் இயக்குனர்கள் பட்டியல்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை