பெத்த கை மாமியார் ஜெயம் ரவிக்கு கொடுத்த கிப்ட்.. மருமகனை தூக்கி விட கோடிகளை வாரி வீசி போராடும் ஆன்ட்டி

multi-millionaire mother-in-law  gave a costly gift  to Jayam Ravi: மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கமலஹாசன் நடிக்கும் தக்லைப் படத்திலும் இணைந்துள்ளார் ஜெயம் ரவி. கூட்டத்தோடு கோவிந்தா போடும் சப்ஜெக்ட்கள் கை கொடுக்க சோலோவாக நடிக்கும் கதைகள் காலை வாரி விடுகிறது. 

ஆம் கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன் போன்ற படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கியது. மீண்டும் சைரன் திரைப்படத்தின் மூலம் தனி ஒருவனாக கம்பேக் கொடுத்தார் ஜெயம் ரவி

தொடர் தோல்விகள் ஏற்பட்ட போதும் ஜெயம் ரவியை துவண்டு விடாமல் இருக்க பக்க பலமாக இருக்கிறார் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார். கொடுத்து வைத்தவர் தான் ஜெயம் ரவி, வேதாளம் படத்தில் சூரிக்கு அமைந்திருந்த கோவை சரளாவை போன்று தன் மகளுக்காக மருமகனின் திறமையை தூண்டி விட்டு அவரது வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார் சுஜாதா. 

Also read: ஹீரோக்களை தாண்டி ஓவர் ஹேண்ட்சமாக இருக்கும் 5 இயக்குனர்கள்.. ஜெயம் ரவி சண்டை போட்டும் மசியத உடன்பிறப்பு

ஜெயம் ரவியின்  மனைவியின் அம்மா மல்டி மில்லினியராம். ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். ஏற்கனவே பூமி மற்றும் அடங்க மறு போன்ற படங்கள்  இவர் தயாரிப்பில் வெளிவந்தது தான். பூமி வசூல் ரீதியாக பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக தற்போது வந்த சைரன் திரைப்படத்தையும் 30 கோடி செலவில் தயாரித்து இருந்தார் சுஜாதா. வயதான தோற்றத்தில் தரமான திரைக்கதையில் மிரட்டி இருந்தார் ஜெயம் ரவி. கலவையான விமர்சனங்களுடன் வசூலில் தன்னிறைவு பெற முடியாமல் ஓரளவு வெற்றியை பெற்றது சைரன்.

விட்ட காசை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடனும் தரமான வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற வேட்கையில் அடுத்த படத்திற்கு கதை கேட்டு ரெடியாகி உள்ளார். இப்படத்தையும் சுஜாதா விஜயகுமாரே தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மருமகனுக்கு ஒன்னேகால் கோடியில் வாட்ச் ஒன்றை கிப்டாக வழங்கி அசர வைத்துள்ளாராம் இந்த மில்லினியர் மாமியார். பொண்ணும் கொடுத்து பொருளையும் கொடுத்து மருமகனை கொண்டாடும் மாமியார் கிடைப்பதற்கு கொடுத்து வைத்துள்ளார் ஜெயம் ரவி.

Also read: கோடிகளை வாரி குவிக்கும் ஜெயம் ரவியின் சைரன்.. 3 வது நாள் கலெக்ஷன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை