வேலன் பட பர்ஸ்ட் லுக்கில் பட்டைய கிளப்பிய பிக் பாஸ் முகென்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் காம்போ!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமானார் முகென் . அவர் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். இதையடுத்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு ஹீரோ வாய்ப்பு குவிந்து வருகிறது.

தற்போது Skyman Films International நிறுவனம் தயாரிக்கும் வேலன் என்ற படத்தில் முகேன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் பிரபு, சூரி, மீனாட்சி , தம்பிராமையா போன்ற பல முன்னணி நடிகர்கள்நடித்துள்ளனர்.

சமீபத்தில் துல்கர் சல்மான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார் . இதுவரை முகேனை மார்டன் பையனாக பார்த்த ரசிகர்கள் வேலன் பட ஃபர்ஸ்ட் லுக் வேஷ்டி சட்டையுடன் கிராமத்து பையனாக மாறிருந்தது ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில மணி நேரங்களிலேயே திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் பட குழுவினர்கள்.

velan
velan

அதுமட்டும் இல்லைங்க இந்த படத்தோட டைட்டில் தான் ஹைலைட்டே. பெரிய ஹிரோக்கள் படத்தின் பெயர் போல் அமைந்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் முக்கிய டாக்காக உள்ளது.

இதில் இன்னுமொரு முக்கியமான தகவல் நம்ம இளையத்திலம் பிரபு இப்படத்தில் இணைந்திருப்பது. பிரபு சாரை பொறுத்த வரை அவளது ஈஸியாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகமாட்டார். ஆனால் வேலன் படத்தின் கதை கேட்ட பிறகு இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக பேசப்படுகிறது.

velan
velan

இப்படத்தின் மற்றுமொரு ப்ளஸ் இயக்குநர் கவின், இவர் முன்னணி இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்தை பட உட்பட அனைத்து படங்களிலும் இணை இயக்குநராக சிறப்பாக பணியாற்றியவர் என்பதால் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. கதையை கிராம & நகர்புறங்களில் அழகாக நகர்த்தி தன் குருவை போல் அடித்து ஆடி இருக்கிறார் இயக்குநர் கவின் என பட குழுவினர்கள் உர்ச்சாகமாக உள்ளனர்.

velan
velan

இப்படி பல சுவாரஸ்யங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த வேலன் படத்தை தயாரிப்பது SkymanFilms International நிறுவன கலைமகன் முபாரக் அவர்கள். தன்னுடைய முதல் படத்தை குடும்பம், காதல், காமெடி, பாடல் என முழு பொழுதுபோக்காக ஆக அனைத்து வயதினரையும் கவரும் வகையில் படத்தை தயாரித்து இருக்கிறார். கதைக்கு மேலும் மெருகூட்ட தாளாரமாக பல பொருட்ச்செலவில் படத்தை தயாரித்து சினிமா ரசிகர்களுக்கு விரைவில் விருந்தளிக்க உள்ளார்.

மேலும் கலைமகன் அவர்கள் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்து படம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.