ஒரே ஓட்டலில் தங்கி இருக்கும் இரட்டை தல.. அஜித்திடம் தோணி வச்ச கோரிக்கை தெரியுமா?

CSK – Ajith Kumar: மார்ச் மாதம் தொடங்கிட்டாலே அடுத்த மூணு மாசத்துக்கு ஐபிஎல் ஃபீவர் தொற்றிக் கொள்ளும். நாட்டுல அந்த மூணு மாசத்துக்கு எந்த பிரச்சனை நடந்தாலும் அது பெரிய விஷயமா பேச மாட்டாங்க. ஒவ்வொரு நாளும் மேட்ச் முடிஞ்சதுக்கு அப்புறம், அந்த மேட்சை பத்தி தான் முழுக்க பேச்சா இருக்கும்.

சோசியல் மீடியா பக்கம் போனாலும் வீடியோ, மீம்ஸ் என அடுத்த மூணு மாசத்துக்கு இதுதான் கதையா இருக்கும். அதுவும் இந்த தடவை மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் இதுதான் பரவலா பேசப்படுது.

அதுக்கு ஏத்த மாதிரி ஏற்கனவே தோனி, என்னோட கடைசி ஐபிஎல் சீசன் சென்னை ஸ்டேடியத்தில் தான் இருக்கும்னு சுவாரசியமான முன்னறிவிப்பையும் சொல்லியிருந்தார். அதனால் தான் இந்த வருஷம் ஐபிஎல் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்குது.

சென்னை அணிக்கும், டெல்லி அணிக்கும் வைக்கப்பட்ட பலப்பரிட்சையில் சென்னை தோத்திருந்தாலும், தோனி ஆடிய ஓவர் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் பலப்பரீட்சை நடக்க இருக்கிறது.

ஐதராபாத் அணி எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு புத்துயிர் பெற்று வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எந்த வருடத்திலும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஆரம்பத்திலேயே இவர்களுடைய ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது.

இதனால் சிஎஸ்கே அணிக்கு இந்த போட்டி வெற்றியா தோல்வியா என்பது பாதிக்கு பாதி தான் சாதகமாக இருக்கிறது. ஆட்டம் எப்படியோ போய்விட்டு போகிறது. இதில் இன்னைக்கு வேறொரு சிறப்பு இருக்கு என்ற செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.

அஜித்துக்கு அழைப்பு விடுத்த தோனி

இன்னைக்கு நடக்கப்போற போட்டிய நேரில் பார்ப்பதற்கு நடிகர் அஜித்குமார் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அஜித் மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

ஐதராபாத் அணி வீரர் நடராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்ட போட்டோ கூட பெரிய அளவில் ட்ரெண்டானது. இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத் அணி இரண்டுமே அஜித்தை இந்த போட்டியை நேரில் வந்து பார்ப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

பிறந்தநாள் விழாவுக்கு போன அஜித், அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக ஸ்டேடியம் வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

அஜித் பெரும்பாலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது கனவில் கூட நடக்காத விஷயம் தான். ஆனால் ஒரு வேலை வீரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வந்துவிட்டால் இன்றைய ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்