சுயம்புலிங்கமாக வளர்ந்த எம்.ஆர்.ராதா.. எம்.ஜி.ஆரால் தொடங்கிய கெட்ட காலம், வீழ்ந்த சம்பவம்

நடிகராக நடிக்கும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரே ஒரு படத்தில் நடித்து தனது நடிப்பு மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களும் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமான நடிகர் தான் எம்.ஆர்.ராதா. இவரின் பெயரை அறியாத நபர்களே இருக்க முடியாது.

இவர் எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான ரத்த கண்ணீர் படம் தான் தற்போது வரை மக்கள் மத்தியில் உள்ளது. இந்த படத்தில் ராதாவின் நடிப்பும் அவர் பேசும் வசனங்களும் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலம். அதுமட்டுமல்ல அவர் டயலாக் பேசும் மாடுலேஷனில் வேறு எந்த நடிகராலும் பேச முடியாது.

அவரை போன்று நடிக்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும் என்பார்கள். அது உண்மை தான். ஏனெனில் எம்.ஆர்.ராதாவிற்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் டயலாக்கை ஒரு முறை கூறினால் போதும் அப்படியே மனப்பாடம் செய்து பேசி விடுவார். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தானாக முன்னேறியதால் இவரை சுயம்பு லிங்கம் என கூறுவார்கள்.

அதுமட்டுமின்றி இவரின் நடிப்பு திறமை காரணமாக இவரை ரசிகர்கள் நடிகவேல் எம்.ஆர்.ராதா என்று தான் அழைப்பார்கள். இப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எம்.ஆர்.ராதா கிட்டத்தட்ட ஆறு திருமணங்கள் செய்து கொண்டார். திரையுலகில் அதிக திருமணம் செய்து கொண்டது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தொடர்ந்து அரசியலில் இறங்கிய எம்.ஆர்.ராதா அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்ய முயற்சி செய்தார். அன்றில் இருந்து ராதாவிற்கு கெட்டகாலம் தொடங்கியது. இந்த குற்றத்திற்காக ராதாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அவரின் நன்னடத்தை காரணமாக ராதாவின் தண்டனை காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் வேடிக்கையாக பார்த்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த ராதா அதன்பிறகு பல இன்னல்களை சந்தித்தார்.

தனது சொத்துக்களை அவரின் மனைவிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டு இறுதியாக திருச்சியில் உள்ள அவரின் வீட்டில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். திரையில் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர்களின் நிஜ வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்பதற்கு ராதா ஒரு உதாரணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்