அப்பாடி என பெருமூச்சு விட்ட விக்ரம்.. கிடப்பில் போட்ட படத்திற்கு வந்த விடிவு காலம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை. அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவராமல் போனது.

இதனால் அவர் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் கோப்ரா திரைப்படத்தை தான் மலைபோல் நம்பி இருக்கிறார். ஆனால் இந்தப் படம் முடிவடைந்து பல நாட்களாகியும் ரிலீசாகாமல் பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்ரம் என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்ச நாட்கள் எங்கேயாவது சென்று வரலாம் என்று வெளிநாடு சுற்றுலா சென்று விட்டார். அப்படி வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வந்த விக்ரமிற்கு கோப்ரா படத்திற்கு டப்பிங் பேச வேண்டும் என்று படக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

உடனே விக்ரமும் சந்தோஷமாக அங்கிருந்து பறந்து வந்து டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவர் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருந்தார். இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தால் தற்போது விக்ரம் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார். பல்வேறு கெட்டப்புகளை அசால்டாக போடுவதில் கில்லாடியான விக்ரம் இந்த படத்தில் ஏகப்பட்ட கெட்டப்புகளில் வருகிறார்.

மேலும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலை தூண்டியுள்ளது. அதனால் கோப்ரா திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து விக்ரம் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.