சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உலகின் மிக அழகான நடிகர்களின் லிஸ்ட்.. 10வது இடம் பிடித்த கிங் நடிகர்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வோம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சில ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் சரிவர எந்த படங்களும் ஓடாமல், பாக்ஸ் ஆபிஸில் காத்து வாங்கிக் கொண்டிருந்த நிலையில், இவர் நடிப்பில் வெளியான பதான், அட்லீ இயக்கிய ஜவான் ஆகிய படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தனர்.

இதனால் இவர் அடுத்து நடிக்கவுள்ள படங்கள் மீதும் ஏகபோக எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து, தற்போது இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தமிழில் கமலுடன் இணைந்து ஹேராம் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றன. சினிமா மட்டுமின்றி பல்வேறு பிசினஸ் செய்து வரும் ஷாருக்கான், ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.

ஷாருக்கான் பெற்ற விருதுகள்

இந்த நிலையில் சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கான் 90 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்ததற்காக இதுவரை 14 பிலிம்பேர் விருதுகளும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் முதல் இவ்விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உலகின் மிக அழகான நடிகர்கள்

ஏற்கனவே சினிமாவில் பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் பெற்ற ஷாருக்கான் உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் டாப் 10 ல் இடம்பெற்ற இந்திய நடிகராக தேர்வாகியுள்ளார். அதன்படி, பிரபல பிளாஷ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூனியன் டி சில்வா தனது ஆய்வின் மூலம் இந்த உலகின் மிக அழகான நடிகர்களின் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். இதில், ஷாருக்கான் 86.76 சதவீத மதிப்பெண்களுடன் 10 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், கிரேக்க கோல்டன் ரேஷியோ ஆப் பியூட்டியின் படி, நடிகர்களின் முக அழகு மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், ஜூலியன் டி சில்வா தனது பேஸ் மேப்பிங் சாப்ட்வேட் மூலம் எந்தெந்த நடிகர்களின் முகம் கோல்டன் ரேஷியோவுக்கு அருகில் இருக்கிறது என்று மதிப்பீடு செய்தார். அதன்படிப்படையில், அழகான நடிகர்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் ஆரோன் டெய்லர் ஜான்சன் முதலிடத்திலும், பிட்டானிய நடிகர் லூசியன் லவிஸ்கவுண்ட் 2 வது இடத்திலும், ஐரிஷ் நடிகர் பால் மெஸ்கல் 2 வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய நடிகர்களில் ஷாருக்கான் மட்டும்தான்!

இப்பட்டியலில், ராபர்ட் பாட்டின்சன், ஜான் லெளடன், ஜார்ஜ் குளூனி, நிக்கோலஸ் ஹோல்ட், சார்லஸ் மெல்டன், இட்ரிஸ் எல்பா ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ள நிலையில், ஷாருக்கான் 10வது இடத்தில் உள்ளார். இந்திய நடிகர்களில் முதல் பத்து இடத்தில் ஷாருக்கானை தவிர யாரும் இடம்பெறவில்லை. எனவே ஷாருக்கானுக்கு ரசிகர்களும், சினிமாத்துறையினரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News