அதிக அளவில் விருதுகளை அள்ளிக் குவித்த 5 நடிகர்கள்.. 100 விருதுகளுக்கு மேல் வாங்கிய நடிப்பு அசுரன்

சினிமா கலைஞர்களை பொறுத்தவரை விருது என்பது அவர்களின் சிறந்த உழைப்பிற்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாகவே நினைக்கின்றனர். தேசிய விருது, பிலிம் பேர் விருது, மாநில விருது, கலைமாமணி விருது போன்றவை எல்லாம் அவர்களது வளர்ச்சிக்கு உதவும் படிக்கட்டுகள். தமிழ் சினிமாவில் 100 விருதுகளுக்கு மேல் வாங்கிய நடிகர் கூட உண்டு. அதிக அளவில் விருதுகளை அள்ளிக் குவித்த தமிழ் நடிகர்கள்,

கமலஹாசன்: தன்னுடைய ஆறு வயதில் கலைப்பணியை ஆரம்பித்த கமலஹாசன் இதுவரை வாங்காத விருது என்றால் அது ஆஸ்கார் தான். டெக்னாலஜி, திரைக்கதை, என தன்னால் முடிந்த அத்தனை துறைகளிலேயும் புதுமையை கையாண்டவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் மொத்தம் வாங்கிய விருதுகள் 116. ஒரு கட்டத்தில் கமல் தனக்கு எந்த விருதும் இனி கொடுக்க வேண்டாம் எனவும், வளரும் கலைஞர்களுக்கு விருதுகளை கொடுங்கள் என்றும் இவரே விருதுகளை புறக்கணித்து விட்டார்.

Also Read: ரஜினி, விஜய் செய்யாததை செய்யும் கமல்.. மக்களுக்காக வாழும் ஆண்டவர்

தனுஷ்: திரையுலகத்திற்கு வந்த 20 வருடங்களில் 80 விருதுகளை வாங்கியவர் தனுஷ். இதில் இரண்டு தேசிய விருது. தனுஷின் சினிமா வளர்ச்சி என்பது அவருடைய கடின உழைப்பையும், நடிப்பின் மீதான தீரா காதலையும் தான் வெளிப்படுத்துகிறது. நடிப்புக்காக மட்டுமல்லாமல் தனுஷ் சிறந்த தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியருக்காகவும் விருதுகள் வாங்கியிருக்கிறார்.

சூர்யா: நடிகர் சூர்யா தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று விட்டார் என்றே சொல்லலாம். ஆஸ்கார் அகாடெமி சூர்யாவை ஸ்பெஷல் ஜூரி குழுவில் உறுப்பினராக அழைப்பு விடுத்து இருப்பது இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்து இருக்கிறது. நடிகர் சூர்யா இதுவரை மொத்தம் 42 விருதுகளை வாங்கியிருக்கிறார். சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரோலக்ஸ் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. திக்குமுக்காடிய திரையுலகம்

விக்ரம்: நடிகர் விக்ரம், கமலஹாசனை அடுத்து ஒவ்வொரு படத்திற்க்காகவும் உடலை வருத்தி, உருவம் மாற்றி நடிக்க கூடியவர். ஒரே படத்தில் இவரால் மட்டும் தான் வித்தியாசமான இரண்டு உடல் கட்டமைப்புகளை காட்ட முடியும். சேது திரைப்படத்தில் தொடங்கிய இவருடைய வெற்றிப்பயணத்தில் இதுவரை 25 விருதுகளை வாங்கியிருக்கிறார்.

அஜித்: நடிகர் அஜித்குமார் நெகடிவ் ஷேடில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படத்திற்காக மட்டுமே 99 ஆம் ஆண்டில் மூன்று விருதுகளை வாங்கியிருக்கிறார். இதுவரை அஜித் 20 அவார்டுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். 18 விருதுகளை வாங்கியிருக்கிறார்.

Also Read: விவேக் மறைவுக்கு வராத அஜித்.. ஒரு அறிக்கை கூட விடாததற்கு காரணம் என்ன?

Next Story

- Advertisement -