வக்கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஓடிடி நிறுவனங்கள்.. சீரழியும் இளைய தலைமுறை

ஒரு திரைப்படம் முழுமையாக தயாராகி மக்களை சென்றடைவதற்கு முன்பு தணிக்கை குழுவின் சான்றிதழை பெறுவது அவசியமாகும். அந்த தணிக்கை குழு அமைப்பு படத்தில் தேவையற்ற வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகள் போன்ற எது இருந்தாலும் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் வெட்டி தூக்கி எறிந்து விடுவார்கள்.

இதனால் அந்தப் படங்கள் அனைத்தும் அதிக வன்முறை காட்சிகள் எதுவும் இல்லாமல் குடும்பங்கள் அமர்ந்து பார்க்கும் திரைப்படமாக இருக்கும். ஒரு காலத்தில் ரத்தம் வரும் காட்சிகள் அதிகமாக இருந்தாலே சென்சார் போர்டு அந்த படத்தை தடுத்து நிறுத்தி விடுவார்கள்.

ஆனால் இப்போது அப்படி கிடையாது திரைப்படங்களில் கதைக்கு தேவை என்ற ஒரு காரணத்தை காட்டி ஆபாச காட்சிகள், கெட்ட வார்த்தை, இரட்டை அர்த்த வசனங்கள், பெட்ரூம் காட்சிகள் போன்றவை சர்வ சாதாரணமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

மேலும் போதை மருந்து, மது அருந்துவது, சிகரெட் போன்ற பல காட்சிகளும் அதிகமாக இடம்பெறுகிறது. இது போன்ற படங்கள் தணிக்கை குழுவுக்கு செல்லும்போது சில இடங்களில் வெட்டப்பட்டும், ஆபாச வார்த்தைகள் போன்ற வசனங்கள் இடம் பெறும்போது பீப் சவுண்ட் போடப்பட்டும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இது போன்ற எந்த கட்டுப்பாடுகளும் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்களுக்கு கிடையாது. அதனால் அந்த படங்களில் அதிக அளவு ஆபாச காட்சிகளும், படுமோசமான கெட்ட வார்த்தைகளை பெண்களே பேசும் காட்சிகளும் இடம்பெறுகிறது.

இது சமுதாயத்திற்கு மிகப்பெரிய சீரழிவாக மாறிக்கொண்டிருக்கிறது. இது போன்று வக்கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஓடிடி நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால், அவர்களே சம்பந்தப்பட்ட திரைப்பட இயக்குனர்களிடம் இது போன்ற காட்சிகள் தான் வேண்டும் என்று கேட்கிறார்களாம். இன்றைய இளைய தலைமுறை சீரழிவதற்கு இந்த நிறுவனங்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்