துணிவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் வாரிசு.. நாளை ட்ரெய்லரில் இருக்கும் உள்குத்து

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் முழுவதுமாக முடிவடைந்து விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தின் டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஆடியோ பங்க்ஷன் முடிந்த உடனேயே விஜய் ரிலாக்ஸாக வெளிநாடு பறந்து விட்டார்.

மேலும் புத்தாண்டு தினத்தன்று ட்ரைலர் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் புத்தாண்டு தான் வந்ததே தவிர ட்ரெய்லர் வரவில்லை. இதனால் நொந்து போன ரசிகர்கள் நாளை வெளிவரும் என்று வெளியான அறிவிப்பையாவது நம்பலாமா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். உண்மையில் இத்தனை சிரமங்களுக்கும் காரணம் இசையமைப்பாளர் தமன் மட்டும்தான்.

Also read: வாரிசு விழாவை புறக்கணித்த சங்கீதா, கிளம்பிய விவாகரத்து சர்ச்சை.. வெளிவந்த உண்மை காரணம்

வாரிசு படத்தின் ஆடியோ ஒர்க்கை இன்னும் முடிக்காமல் அவர் பெண்டிங் வைத்திருக்கிறார். அதனாலேயே படத்தின் சென்சார் சர்டிபிகேட் வாங்குவதற்கு கூட மிகவும் தாமதமாகி இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் டம்மியாக ஒரு ஆடியோ டிராக்கை கொடுத்து சென்சார் போர்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் புத்தாண்டு தினத்தில் எப்படியாவது ட்ரெய்லரை வெளியிட்டு விடலாம் என்று படக்குழு பிளான் செய்திருந்தது.

ஆனால் அந்தத் திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில் துணிவு டிரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது சோசியல் மீடியாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் துணிவு படத்தின் டிரைலரை பார்த்து வாரிசு பட குழு கொஞ்சம் அல்ல நிறையவே பீதி அடைந்து இருக்கின்றனர். அதிலும் நெகட்டிவ் கேரக்டர் போன்ற காட்டப்பட்டிருக்கும் அஜித்தின் கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Also read: அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்

அதனாலேயே பட குழு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த டிரைலரில் சில பட்டி டிங்கரிங் பார்க்கும் வேலைகளை இப்போது செய்து வருகிறதாம். அது மட்டுமல்லாமல் துணிவு ட்ரெய்லரை மிஞ்சும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று பல திருத்தங்களை வம்சி மேற்கொண்டு வருகிறாராம். அந்த வகையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் வாரிசு ட்ரைலர் படக்குழுவுக்கு ஒரு வித திருப்தியை கொடுத்திருக்கிறது.

தற்போது படத்தின் ரிலீஸ் தேதியும் வெளிவந்துள்ள நிலையில் வாரிசு ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே சோசியல் மீடியாவை ரணகளப் படுத்திக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாரிசு, துணிவை ஓரம் கட்டி விடும் என்ற கருத்துக்களும் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

Also read: சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு குழாயடி சண்டை போடும் ஹீரோயின்கள்.. விஜய், அஜித்தையும் மிஞ்சிய தகராறு

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -