பணம் தான் முக்கியம், சினிமா நடிப்பு எல்லாம் அப்புறம் தான்.. ஓவர் திமிரில் ஆடும் நடிகை

சினிமாவில் சாதித்த பல பிரபலங்களை கேட்டால் நடிப்பு தான் எனக்கு உயிர், அதற்காக பல அர்ப்பணிப்புகள் செய்ய தயார் என கூறுவார்கள். ஆனால் பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் நடிக்க வந்ததற்கு முக்கிய காரணம் பணம் தான் என்று வெளிப்படையாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் வெள்ளிதிரையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தாலும் அவருக்கு தற்போது வரை சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தான் நடித்து வருகிறார்.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி

அதாவது செய்தி தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். அதன்பின்பு வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர், தமிழில் நடிக்க வந்த போது எதிர்காலத்தை பற்றி எனக்கு எந்த திட்டமும் இல்லை, சினிமாவில் நடித்தால் பணம் கிடைக்கும் என்பதற்காக தான் வந்தேன். அதன் பிறகு தான் சினிமா, நடிப்பு எல்லாமே என்று கூறியுள்ளார்.

Also Read : திருமணமாகாமல் லிவிங் டு கெதர் வாழ்க்கை.. 18 வயதில் வந்த கனவை நிஜமாக்கிய பிரியா பவானி சங்கர்

இவரைப் போல தான் இயக்குனர் நெல்சன் ஒரு பேட்டியில் ஆரம்பத்தில் பணத்திற்காக மட்டுமே படம் எடுத்ததாக கூறினார். அதுமட்டுமின்றி பணம் கிடைத்துவிட்டது இனிமேல் ஜெயித்தால் என்ன, தோற்றால் என்ன என்று ஆணவமாக பேசுகிறார். இது அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதேபோல் இப்போது தொழில் மீது பக்தி இல்லாமல் பணத்திற்காக மட்டுமே சினிமாவில் வந்தேன் என்ற தைரியமாக பிரியா பவானி ஷங்கரும் கூறியுள்ளார். நடிப்பு மீது வெறியாக இருக்கும் பலர் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் இவர்கள் இப்படி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

Also Read : பட வாய்ப்புக்காக அதிரடியில் இறங்கிய பிரியா பவானி சங்கர்.. பாத் டப் போட்டோவால் கிடுகிடுக்கும் மீடியா

- Advertisement -