பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான மோகன்லாலின் மரைக்காயர்.. ட்விட்டரில் வெளிவந்த விமர்சனம்

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்ற சரித்திர திரைப்படம் ஆனது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற ஐந்து மொழிகளில் டிசம்பர் 2-ம் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. மரைக்காயர் திரைப்படத்தின் முதல் பாதியில் மோகன்லால் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், பிரபு, மஞ்சுவாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுபாஷினி உள்ளிட்டோர் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எனவே இந்தப்படத்தில் ட்விட்டரில் தாறுமாறாக வந்து கொண்டிருக்கிறது.

17 ஆம் நூற்றாண்டின் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை என்னவென்றால் குன்ஹாலி மரைக்காயர் என்ற போர் வீரரின் சொந்த வாழ்க்கை சரித்திரம்தான் இந்தப் படத்தின் முழுக்கதை.

படத்தின் கதாநாயகனாக மோகன்லாலின் நடிப்பு, இந்த படத்தையே தூக்கி நிறுத்தி உள்ளது. அந்த அளவிற்கு பல இடங்களில் நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு வீரமான நடிப்பை வெளிக் காட்டினார். தன்னுடைய மக்களிடம் ‘மரணம் என்பது என்றைக்கு வேண்டுமானாலும் வரக்கூடியது. இப்படி பயந்துகிட்டே இருந்தால் இழிவான வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு விடுவோம். என் பின்னாடி வர்றவங்க நம்பி வாங்க’ என்று அவர் பேசும் காட்சி படத்தைப் பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளே நிற்கிறது என்று ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கின்றனர்

marakkar-twitter-review-mohanlal
marakkar-twitter-review-mohanlal

.

இந்த படம் முழுவதும் செட்டிக்குள்ளே எடுக்கப்பட்டது என்று நம்ப முடியாத அளவிற்கு படத்தில் இடம்பெறும் காட்சிகளும் நடிகர் நடிகைகளின் உடைகளும் 17வது நூற்றாண்டிற்கே கொண்டு சென்றிருக்கிறது. இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு போர் வீரரின் பயோபிக் என்பதால் கண்டிப்பாக பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டும் கதைக்களமாக அமைந்திருக்க வேண்டும்.

marakkar-twitter-review-mohanlal
marakkar-twitter-review-mohanlal

ஆனால் இவர்கள் மேக்கிங் மற்றும் ஸ்கிரீன்பிளே இரண்டிலுமே கோட்டை விட்டு விட்டனர். படம் முழுவதும் 3 மணி நேரம் ஓடுகிறது. ஆனால் 2 மணி 15 நிமிடத்தில் கட் பண்ண வேண்டிய படத்தை வழ வழா, கொழ கொழா என்று ஒவ்வொரு காட்சியையும் ஜவ்வு போல் இழுத்தடித்து மொத்தப் படத்தின் நீளம் பெரிதாகிவிட்டது என்பது ரசிகர்களின் கருத்து. படத்தின் ஆரம்பத்திலிருந்து ரெண்டு மணி நேரம் படத்தை ஜவ்வுவாய் இழுத்துவிட்டு கடைசி ஒரு மணி நேரத்தில் படத்தின் முக்கிய காட்சிகளை வேகவேகமாக காண்பித்து படத்தின் க்ளைமாக்ஸுக்கு அவதி அவதியாக சென்று விட்டனர்.

marakkar-twitter-review-mohanlal
marakkar-twitter-review-mohanlal

இதுதான் இந்தப் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்ற விடாமல் செய்ததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எனவே இந்தப்படம் மொத்தத்தில் இழுவையான திரைக்கதைதான் இருப்பினும் இந்த படம் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் ரசிகர்கள் ட்விட்டரில் பலர் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றன.

marakkar-twitter-review-mohanlal
marakkar-twitter-review-mohanlal
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்