அசாருதீனுடன் கிசுகிசுக்கப்பட்ட தமிழ் நடிகரின் மனைவி.. மன்மதனாய் பல சேட்டைகள் செய்த கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியில் சவுரவ் கங்குலிக்கு முன்னதாக கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். இவர் தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். ரசிகர்களை விட இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உள்ளனர்.

முகமது அசாருதீன், சங்கீதா பிஜ்லானி , நக்மா போன்ற நடிகைகள் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்திய நடிகை நக்மா உடன் இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அப்போவே பல சர்ச்சைகளை கிளப்பியது.

Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

அதுமட்டுமின்றி முகமது அசாருதீன் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா உடனும் கிசுகிசுக்கப்பட்டார். இப்படி அசாருதீன் ஆட்ட திறமையில் ஏகப்பட்ட பெண் ரசிகைகளும், நடிகைகளும், வீராங்கனைகளும் சிக்கியுள்ளனர்.

அதாவது முகமது அசாருதீன் நவ் யூரின் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டுள்ளார் பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்ற அதே வருடம் பாலிவுட் நடிகையான சங்கீதா பிஜ்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read: மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தகுதியுள்ள 5 நட்சத்திர வீரர்கள்.. யோசிக்கும் படி செய்த வயது

இரண்டு வருடங்கள் கூட நீடிக்காத இவர்களது திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. பின்பு முகமது அசாருதீன் மற்றும் ஜுவாலா கட்டா இருவரைப் பற்றிய பல கிசுகிசுக்கள் வந்தன. அதனைப்பற்றி ஜுவாலா கட்டாவிடம் கேட்ட போது கூட அவர் கோபமடைந்து எப்போதும் ஏன் இதை பற்றிய கேள்வி கேட்கிறீர்கள் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் எந்த விதமான நட்புறவு இருந்தது என்பதை பற்றி இதுவரை இவர்கள் இருவரும் வெளிப்படையாக கூறவில்லை. தற்போது விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

- Advertisement -