பாஜக அரசு காட்டும் பாசாங்கு வேலை.. தமிழர்களுக்கு பிரதிநித்துவம் கொடுக்காத மத்திய அமைச்சரவை

Modi 3.0: பாஜக அரசு மீது தென்னிந்தியர்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் மனதிருப்தி கிடையாது. இது ஒவ்வொரு தேர்தலிலும் வெட்ட வெளிச்சமாக தென்னிந்தியர்கள் காட்டிவிடுகிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பட்ட தோல்வி அந்த கட்சியினரால் ஜீரணிக்கவே முடியாத ஒன்று.

அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், சௌமியா அன்புமணி, ராதிகா என நிறைய நட்சத்திர வேட்பாளர்கள் அந்த கட்சியில் களம் கண்டிருந்தாலும் யாருக்குமே பெரிய அளவில் ஓட்டுகள் கிடைக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் தமிழ்நாடு எப்போதுமே காங்கிரஸ் மற்றும் திமுகவின் கோட்டை என்பதை இந்த முறையும் நிரூபித்து விட்டார்கள் தமிழக மக்கள். ஒரு மாநிலத்தில் மத்தியில் ஆளும் கட்சி ஒரு சீட்டு கூட ஜெயிக்காமல் போனால் அந்த மாநிலத்தின் நலத்திட்ட மேம்பாடுகள் எப்படி இருக்கும் என்பது எல்லோருக்குமே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

பாஜக அரசு காட்டும் பாசாங்கு வேலை

ஒவ்வொரு நிதியையும் போராடி வாங்குவது போல் தான் நிலைமை இருக்கும். அது மட்டுமில்லாமல் இந்த முறை மத்திய அமைச்சரவையில் தமிழர்களுக்கு பெரிய அளவில் பிரதிநிதித்துவம் இல்லாதது பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

எல் முருகனுக்கு பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும் அதில் தமிழக மக்களுக்கு பெரிய அளவில் சந்தோஷம் எல்லாம் இல்லை. அண்ணாமலைக்கு ஓட்டே போடவில்லை என்றாலும் ஒருவேளை அவர் மத்திய அமைச்சராக ஆகியிருந்தால் கண்டிப்பாக தமிழக மக்கள் ஆதரவு கொடுத்திருப்பார்கள்.

அதேபோன்று நிர்மலா சீதாராமன் இந்த முறையும் நிதித்துறை அமைச்சராக பதவி ஏற்றி இருக்கிறார். தேர்தல் களத்தில் நின்று மக்களை சந்திக்க திராணியில்லாதவர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பது பாஜக அரசின் பாரபட்சம் காட்டும் புத்தியை தான் காட்டுகிறது.

மழை வெள்ள, இயற்கை பேரிடர் நிதிகள் எல்லாம் பிச்சை போடுவது போன்று என அசால்ட் ஆக நிர்மலா சீதாராமன் பேசியது யாராலும் மறக்க முடியாது. அதே போன்று ஜெய்சங்கர் மீண்டும் உள்துறை அமைச்சராக பதவியேற்று இருப்பதும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

என்னதான் தமிழக மக்கள் மோடி அரசை ஜெயிக்க வைக்கவில்லை என்றாலும், மத்தியில் ஆளும் கட்சியாக மாறிய பின்பு எல்லா மாநிலத்திற்கும் ஒரே மாதிரியான இட ஒதுக்கீடு மோடி கொடுத்திருக்க வேண்டும். இதை மோடி அரசு தவற விட்டுவிட்டது.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -