சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பொன்னியின் செல்வன் போஸ்டரில் ஏற்பட்ட குழப்பம்.. அவமானத்தை நாசுக்காக திருத்திய ஜெயம்ரவி

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மணிரத்னம் இந்த நாவலை படமாக எடுத்துள்ளார். இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகயுள்ளது.

இதனிடையே தினமும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் முதலாவதாக விக்ரமின் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதன் பிறகு கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியாகி வந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவி ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தற்போதும் பிரம்மிப்பாக பார்க்கக்கூடிய தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் கதாபாத்திரம் தான் இது. இந்த கதாபாத்திரம் அருள்மொழி வர்மன், பொன்னியின் செல்வன், ராஜ ராஜ சோழன் என பல பெயர்கள் இந்தக் கதையில் அவர் அறியபடுவார்.

ஆனால் இந்த போஸ்டரில் அருள்மொழி வர்மன் என்பதற்கு பதிலாக அருண்மொழி வர்மன் என்ற இருக்கிறது. இதை பார்த்த பொன்னியின் செல்வன் வாசகர்கள் டைட்டில் போஸ்டரில் எழுத்து பிழை இருப்பதை கூட இயக்குனர் கவனிக்கவில்லையா என விமர்சித்து வருகின்றனர். ஒரு பிரம்மாண்ட படத்தின் போஸ்டர் வெளியிடும்போது இவ்வளவு அலட்சியமா என்றும் கேட்டு வருகின்றனர்.

ponniyin Selvan-Jayam Ravi

ஆனால் போஸ்டர் வெளியான பிறகு ஜெயம் தனது ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழனின் பெருமை, சோழனின் வரலாறு, அதில் பொன்னியின் செல்வனாக அருள்மொழி வர்மன் என்பதில் மெய்சிலிர்க்கிறேன் என்று போஸ்டரில் உள்ள தவறை நாசுக்காக திருத்தியுள்ளார்.

- Advertisement -

Trending News