வசூலை குவித்த அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன்.. கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

Arun Vijay : அருண் விஜய்யின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி போட்ட யானை படம் குடும்ப ஆடியன்ஸை பெரிய அளவில் கவர்ந்திருந்தது.

அதற்கு அடுத்தபடியாக அருண் விஜய்யின் நடிப்பில் வெளியான படம் தான் மிஷன் சாப்டர் ஒன். இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கிய நிலையில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்பா, மகள் பாசத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தனது மகளின் மருத்துவ செலவுக்காக வெளிநாடு செல்லும் அருண் விஜய் அங்கு மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து விடுபட்டு தனது மகளைக் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் மிஷன் சாப்டர் ஒன்

மிஷன் சாப்டர் ஒன் ஜனவரி 12 பொங்கலுக்கு வெளியான நிலையில் நீண்ட நாளுக்கு பிறகு இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதுவும் ரசிகர்கள் பெரிதும் இந்த படத்தின் ஓடிடி ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் இன்று படம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போது திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தவர்கள் மட்டுமன்றி தவற விட்டவர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படத்தை பார்க்கலாம். அடுத்ததாக மிஷின் சாப்டர் ஒன் வெற்றிக்குப் பிறகு இப்போது பாலாவுடன் கூட்டணி போட்டு வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வணங்கான் டீசர் வெளியான நிலையில் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் பலரையும் மிரள செய்திருந்தது. இந்த வருடம் வணங்கான் படமும் வெளியாகி கண்டிப்பாக மாபெரும் வெற்றியை அருண் விஜய்க்கு கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை