வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

காணாமல் போன தனுஷ் பட நடிகை.. மோசமான கதாபாத்திரத்தால் சிம்பு படத்தோடு முடிந்த கேரியர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்களுக்கு இடையே ஒரு போட்டி ஏற்பட்டு நானா நீயா என்று மோதிக் கொள்ளும் அளவிற்கு எதிரும் புதிருமாக நடித்து வருவார்கள். அப்படி 2000 இல் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது மோதி கொண்டவர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ். அத்துடன் ஒருவர் படத்தில் புதிதாக ஒரு நடிகை நடித்து வெற்றி கொடுத்தால் அந்த நடிகை தான் படத்திற்கும் நடிக்க வேண்டும் என்று அதிகமான நடிகர்கள் எண்ணுவார்கள்.

பொதுவாகவே தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே நடிகைகளுக்கு ஒரு தட்டுப்பாடு இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் மற்ற மொழிகளிலும் இருந்து சில நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வந்து அறிமுகமாகி ஹீரோயினாக நடிப்பார்கள். அப்படித்தான் ஒரு நடிகை அறிமுகமான முதல் படத்திலேயே தனுஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படம் அவருக்கு பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியை கொடுத்தது.

Also read: சிம்புவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் யார் தெரியுமா? அவரே சொன்ன பதில்

அடுத்து சிம்புக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு இவருடைய சினிமா கேரியரை முடிந்து விட்டது என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் அந்த மாதிரியானது. ஒரு மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே அதேபோலவே தேடி வந்ததால் மிகவும் அப்செட்டில் இருந்ததாக ஒரு பேட்டியில் அவரை கூறி இருக்கிறார்.

மேலும் சிம்பு படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்பதால் அடுத்து இவர் நடித்த எந்த படங்களும் சரியாக ஓடாமல் இவர் பெயரை டேமேஜ் செய்தது. அது மட்டுமல்லாமல் அடுத்து எந்த ஒரு நல்ல கதாபாத்திரமும் அமையாமல் சினிமாவை வெறுத்து ஓடோடிவிட்டார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை சுள்ளான் மற்றும் மன்மதன் படத்தில் நடித்த சிந்து துலானி.

Also read: வரிசைக்கட்டி நிற்கும் தனுஷின் பிரச்சனைகள்.. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

இவர் சுள்ளான் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகி நடித்தார். அறிமுகமான முதல் படத்திலேயே இவருடைய நடிப்புக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதே வருடத்தில் மன்மதன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் உண்மையான காதலை கொச்சைப்படுத்தி ஒரு மோசமான கேரக்டரில் நடித்திருப்பார்.

இதுதான் இவர் தேர்ந்தெடுத்த மிகப்பெரிய தப்பாக இப்பொழுது வரை ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அதற்குப் பிறகு ஒரு நல்ல வாய்ப்பே கிடைக்காமல் ஒரு சில படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாமல் இவருடைய சினிமா கேரியரை முடிந்து விட்டதாக ஒதுங்கி விட்டார்.

Also read: முதல் காதலை நினைத்து உருகும் செல்வராகவன்.. தனுஷை தொடர்ந்து நடக்க போகும் விவாகரத்து

- Advertisement -

Trending News