வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

46 வயதிலும் சிங்கிளாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ்.. வாழ்க்கையில் நடந்த பெரும் சோகம்

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இந்த நடிகை . இவர் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழில் ரட்சகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு மாடல் அழகியாக இருந்த இவர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார்.

முதல் முதலாக மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்ற முதல் இந்தியரும் இவர்தான். அவர் யாருமல்ல பிரபல நடிகை சுஷ்மிதா சென் தான். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஃபிலிம் பேர் உட்பட ஏராளமான விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

இப்படி புகழின் உச்சியில் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் ஒரு நடிகையாக இருக்கும் இவர் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாகத் தான் இருக்கிறார். பலரும் இவரிடம் கேட்கும் ஒரே விஷயம் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றுதான்.

ரசிகர்களின் இந்த கேள்விக்கு அவர் தற்போது முதல் முறையாக மனம் திறந்து பதிலளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எனது வாழ்க்கையில் இருந்த சில மனிதர்கள் என்னை ஏமாற்றியது தான் நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய வாழ்க்கையில் மூன்று முறை திருமணம் செய்து கொள்ள கூடிய சூழ்நிலை வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் கடவுள் என்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுஷ்மிதா சென் வாழ்க்கையில் பல சோகங்கள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

அது மட்டுமல்லாமல் இவர் ரோஹ்மன் ஷால் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்தார். ஆனால் சில காரணங்களால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இவருக்கு உடலில் சில பிரச்சனைகளும் இருக்கிறது. அதற்காக இவர் நிறைய மருந்துகளும் எடுத்துக் கொள்கிறார்.

இதுவும் அவர் தனியாக இருப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இப்படி வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை கடந்து வந்த சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது தன்னுடைய மகள்களுக்காகத் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

Trending News