சிம்புவுக்காக 3 மாதம் காத்திருக்கும் மிஷ்கின்.. சீக்ரெட்டாக நடக்கும் ட்ரைனிங்

simbu-myshkin-cinemapettai
simbu-myshkin-cinemapettai

தன்னை பற்றி வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் என்ட் கார்டு போட்ட சிம்பு தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு ரெடியாகி வருகிறார். மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சிம்புவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக் கொடுத்துள்ளது.

தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த படத்திற்காக அவர் மூன்று மாத காலம் வரை தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வதற்காகவே ஒதுக்கி இருக்கிறாராம். இத்தனைக்கும் அவர் மிஷ்கினிடம் ஸ்கிரிப்டை முழுவதுமாக கூட கேட்கவில்லையாம்.

Also read: சிம்புவுடன் நேருக்கு நேராக மோதும் சூரி.. தேவையில்லாமல் கோர்த்து விடும் வெற்றிமாறன்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பற்றி மட்டுமே கேட்டிருக்கிறார். அதை கேட்டுவிட்டு படத்தில் நடிக்க சம்மதித்த சிம்பு தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏனென்றால் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் சிம்பு தனி ஒருவராக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அடிக்க வேண்டுமாம். இதை மிஷ்கின் கூறிய உடனேயே அவர் அடுத்த கட்ட பயிற்சிக்கு தயாராகி இருக்கிறார்.

இந்த விஷயத்தை தற்போது மிஷ்கின் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அளவுக்கு சிம்பு அர்ப்பணிப்புடன் இருப்பதை மிகவும் பாராட்டியும் பேசியிருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிம்பு இந்த மூன்று மாத கால ட்ரெயினிங்கை முடித்து வந்த பிறகுதான் அவருடைய பத்து தல திரைப்படமே ரிலீஸ் ஆகுமாம்.

Also read: பத்து தல படத்திற்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சிம்பு

மேலும் சிம்பு தற்காப்பு கலைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு கற்று வருகிறார் என்கிற வீடியோவும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் ரியல் ஹீரோ நீங்கள்தான் என்று அவரை பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே சிம்பு அதிகமாக இருந்த தன்னுடைய உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்தது ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இப்போது அவர் செய்யும் தீவிர பயிற்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் இந்த ட்ரெய்னிங்கை பரம ரகசியமாகத் தான் செய்து வருகிறாராம். அந்த வகையில் சிம்பு மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். அதை தொடர்ந்து சிம்பு ஹோம்பெல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: பிரம்மாண்டமாக உருவாகும் சிம்புவின் 50வது படம்.. பிரபல இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தை

Advertisement Amazon Prime Banner