யாரா இருந்தா எனக்கென்ன.. மிர்ச்சி சிவா படத்தை குப்பையில் போட்ட பிரபல தயாரிப்பாளர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிர்ச்சி சிவா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் அவர் கதை எழுதி நடித்து வரும் ஒரு நகைச்சுவை திரைப்படம் சுமோ. இந்தப் படத்தில் சிவாவுடன் இணைந்து பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஜப்பான் மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ நடித்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்குள் நடந்த பிரச்சனையின் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் பைனான்ஸ் சம்பந்தமாக ஐசரி கணேஷ் மற்றும் விடிவி கணேஷ் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை எழுந்துள்ளது.

அதாவது விடிவி கணேஷ் கணக்கு வழக்கு சரியாகக் கொடுக்கவில்லை என்று ஐசரி கணேஷ் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் கடந்த 2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த இந்த திரைப்படம் இன்னும் வெளியே வராமல் இருக்கிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் நடித்த அந்த குண்டு ஜப்பான்காரர் இதன் மூலம் தனக்கு பெரிய புகழ் கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தார். அதோடு மிர்ச்சி சிவாவும் இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார். இருப்பினும் ஐசரி கணேஷ் இன்னும் இந்த படத்தை வெளியிடாமல் கோபத்தில் இருக்கிறார்.

பொதுவாக மிர்ச்சி சிவா ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்த திரைப்படம் குழந்தைகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர்களின் இந்த பிரச்சனையால் தற்போது படம் வெளிவர முடியாமல் தவிக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்