அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் சிக்கிய 5 படங்கள்.. ரஜினியின் வெற்றிப் படத்தை வச்சு செஞ்சுட்டாருல!

நடிகர் சிவா ரேடியோ ஜாக்கியாக இருந்து ஹீரோ ஆனவர். வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமான சிவா, அதன் பின்னர் பல படங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த தமிழ் படம் தான் சிவாவை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்து. மற்ற படங்களை, பிரபலங்களை கலாய்க்கும் ரூட் தான் தனக்கு ஒர்க் அவுட் ஆகிறது என்பதை தெரிந்து கொண்ட சிவா, அதையே பாலோ பண்ணி ஒரு சில படங்களில் நடித்தார். அந்த படங்களும் நல்ல ரீச்சை கொடுத்தன. சிவா கலாய்த்து தள்ளிய 5 தமிழ் படங்கள்:

தமிழ்ப்படம்: இயக்குனர் அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த படம் தமிழ்ப்படம். கோலிவுட்டில் இதுவரை யாரும் எடுக்காத புதிய முயற்சி. ஒரு படம் முழுக்க இதுவரை ரிலீசான மொத்த தமிழ் படங்களையும் பங்கமாக கலாய்த்து இருப்பார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் தொடங்கி எம் ஜி ஆர் , சிவாஜி வரை பாரபட்சம் இல்லாமல் ஓட்டி இருப்பார்கள்.

Also Read: ஆளவந்தான் படத்தில் மிர்ச்சி சிவாவை நோட் பண்ணீங்களா.? கோட் சூட்டுடன் வைரலாகும் புகைப்படம்

தில்லு முல்லு: 1981 ஆம் ஆண்டு ரிலீசான ரஜினியின் தில்லு முல்லு படத்தின் கதையை மையமாக கொண்டு 2013 ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தில்லு முல்லு 2. இந்த படத்தில் ரஜினியின் கேரக்டரில் சிவா நடித்திருப்பார். தேங்காய் ஸ்ரீநிவாசன் கேரக்டரில் பிரகாஷ் ராஜும், சௌகார் ஜானகி கேரக்டரில் கோவை சரளாவும் நடித்திருந்தனர்.

தமிழ்ப்படம் 2: தமிழ்ப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்தது தான் தமிழ்ப்படம் 2. 2015 க்கு பின் வந்த அத்தனை படங்களையும் மொத்தமாக வைத்து செய்து விட்டார் சிவா. படத்தின் போஸ்டரிலேயே பாகுபலி படத்தை கலாய்ப்பது போல், லிங்கத்தை தூக்கும் பிரபாஸை இமிடேட் செய்திருப்பார் சிவா.

Also Read: 2 வருடமாக பொட்டியில் கிடக்கும் சிவா படம் OTT ரிலீஸ்.. ட்ரெய்லர் வந்தப்பவே படம் வந்திருந்தா மாஸ் ஹிட் ஆகியிருக்கும்!

யா யா: ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜசேகரன் இயக்கிய திரைப்படம் யா யா. இந்த படம் ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சிவா ராஜ்கிரண் என்ற தோனியாகவும், சந்தானம் ராமராஜன் என்ற ஷேவாக்காகவும் படம் முழுக்க காமெடி காட்சிகளில் கலக்கி இருப்பார்கள்.

சுமோ: இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கி சிவா மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்த திரைப்படம் சுமோ. இந்த படத்தில் யோகி பாபு மற்றும் VTV கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் சிவா பிரபல அரசியல் தலைவர் ஒருவரை பயங்கரமாக கலாய்த்து இருக்கிறார்.

Also Read: யாரா இருந்தா எனக்கென்ன.. மிர்ச்சி சிவா படத்தை குப்பையில் போட்ட பிரபல தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -