பாரதிராஜாவின் ஓடாத படத்திற்கு பெரும் உதவி செய்த எம்ஜிஆர்.. அதற்குப்பின் வெள்ளிவிழா கண்டு சாதனை

1984 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய படத்திற்கு எம்ஜிஆர் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். இந்த படம் இளையராஜா இசையில், ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும் இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, டாக்டர் ராஜசேகர், ஒய் ஜி மகேந்திரன், சித்ரா லட்சுமணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

‘புதுமைப்பெண்’ படத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிகப் பெரிய உதவி செய்ததாக ஏவிஎம் சரவணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதாவது புதுமைப்பெண் படத்தின் இயக்குனரான பாரதிராஜா படம் சரியாக ஓடவில்லை என்று ஏவிஎம் சரவணனிடம் மிகவும்  வருத்தப்பட்டாராம். மேலும் ஏவிஎம் சரவணன், அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரின் பிஏவை தொடர்பு கொண்டு, எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்று கேட்டாராம். அவரும் அப்பாயின்மென்ட் கொடுக்க, நேரில் சென்று பாரதிராஜாவும் ஏவிஎம் சரவணனும் எம்ஜிஆரை பார்த்தனராம்.

என்ன விஷயம் என்று எம்ஜிஆர் கேட்க, அதற்கு ஏவிஎம் சரவணன் ‘பாரதிராஜாவிற்கு மனசு சரியில்லன்னு சொன்னாரு.. உங்கள பாத்தா சரியாயிரும்னு கூட்டிட்டு வந்தேன்’ என்று பதில் அளித்தாராம்.

இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் புதுமைப்பெண் படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் Tax எக்சப்ஷன் கொடுக்க சொன்னாராம். இதற்கு பின் தான் புதுமைப்பெண் படம் மெகா ஹிட்டானது என்பதையும் அழுத்தி கூறியுள்ளார் ஏவிஎம் சரவணன்.

எனவே புதுமைப்பெண் படத்திற்காக எம்ஜிஆர் செய்த இந்த பேருதவி தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

Next Story

- Advertisement -