400 கோடி நிலத்தை கிப்டாக கொடுத்த எம்ஜிஆர்.. அதை ஸ்டூடியோவாக மாற்றிய நடிகை

MGR: தமிழ் சினிமா தற்போது வரை கொடி கட்டி பறப்பதற்கு எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் இதற்கு அடிக்கல் நாட்டி வைத்தது எம்ஜிஆர் தான். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்பாக இருந்து சாம்ராஜ்யத்தை நிலை நாட்டியவர். அதனால் தான் இவர் மறைந்தாலும் இவரை பற்றி விஷயங்கள் காலம் கடந்தாலும் பேசப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட இவருடைய இன்னொரு குணம் என்னவென்றால் இவருக்கு யாராவது பிடித்து விட்டாலோ, அல்லது இவருடைய நம்பிக்கைக்கு பொருத்தமானவராக யாராவது இருந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு கிப்ட் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் அம்பிகா மற்றும் ராதாவிற்கு மிகப்பெரிய கிப்ட்டே பரிசாக வழங்கி இருக்கிறார்.

அதாவது போரூர் டூ வளசரவாக்கம் உள்ள இடங்களில் முக்கால்வாசி இடத்தை எம்ஜிஆர் அப்பொழுது பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த இடத்தை தான் ராதா அம்பிகாவும் ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அது தற்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோகளில் ஒன்றாக ARS பெயரில் இருக்கிறது. தற்போது இந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

Also read: ரஜினி, எம்ஜிஆர் மீது எதிர்ப்பை காட்ட பழிவாங்கப்பட்ட 2 படங்கள்.. இரண்டு தலைகள் செய்த உச்சகட்ட அராஜகம்

இதை ஆரம்பிக்கும் பொழுது எம்ஜிஆர் தான் முன்னிலையில் நின்று துவங்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது அம்பிகா மற்றும் ராதாவிற்கும் மட்டுமே சென்னையில் ஏகப்பட்ட சொத்துக்கள் அதிகமாகி இருக்கிறது. அத்துடன் வீடுகள் மற்றும் நிறைய சொத்துக்கள் இருந்தாலும் சென்னையில் இவர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் என்றால் அது எம்ஜிஆர் கொடுத்த கிப்ட் தான் என்று சொல்லும் அளவிற்கு அந்த இடத்தை அவர்கள் மிகப் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்கள்.

ஆனால் இந்த இடத்தை எம்ஜிஆர் இவர்களுக்கு கொடுக்கும் பொழுது அதை அரசு நிலமாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் இதை பெருசாக யாரும் கண்டுகொள்ளதால் எம்ஜிஆர் அதை மாற்றி ராதா மற்றும் அம்பிகாவிற்கு கிஃப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அது தற்போது சென்னையில் மிகவும் பிரபலமான ஸ்டுடியோவாக இயங்கிக் கொண்டு வருகிறது.

Also read: எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல் வரிசையில் முட்டி மோதிய அஜித்- விஜய்.. அதல பாதாளத்திற்கு சென்ற 4வது தலைமுறை