வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரஜினியுடன் நடிக்க கூடாது.. நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்

எம்ஜிஆர் எப்போதுமே வெளிப்படையாக இருக்கக்கூடியவர். அதனாலேயே அவர் ரொம்பவும் கோபக்காரர் என்றெல்லாம் மக்கள் கூறுவது உண்டு. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதில் ஒன்று தான் பிரபல நடிகை ஒருவரை ரஜினியுடன் இணைந்து நடிக்க கூடாது என்று அவர் கூறிய சம்பவம்.

அதாவது எம்ஜிஆரை பொறுத்தவரை அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் வேறு யாருடனும் நடித்து விடக்கூடாது என்று அவர் நினைப்பாராம். அதனாலேயே அவருக்கு பிடித்த கதாநாயகிகளை அவர் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். அப்படி எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக இருந்தவர் தான் லதா.

Also read: கிட்டி கிருஷ்ணமூர்த்தி கலக்கிய 5 படங்கள்.. கமல், ரஜினியை ஓடவிட்ட பழைய டிஐஜி தினகர்

இது குறித்து அந்த காலத்திலேயே பல செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்திருக்கிறது. அப்போது லதா பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினியை அவர் காதலிப்பதாக ஒரு செய்தி பரவியது. இதனால் எம்ஜிஆர் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அதன் காரணமாகவே அவர் லதாவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து விட்டாராம். அங்கேயே குடியுரிமை வாங்கி அவரை சகல வசதிகளுடன் தங்க வைத்திருக்கிறார். அதன் பிறகு லதா, எம்ஜிஆர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தான் இந்தியா திரும்பினாராம். அதேபோன்று மற்றொரு நடிகையையும் எம்ஜிஆர் இதேபோன்று நடத்தி இருக்கிறார்.

Also read: வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

அவர் வேறு யாரும் அல்ல நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா தான். இவர் எம்ஜிஆர் உடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரையும் எம்ஜிஆர் சிங்கப்பூருக்கே அனுப்பி வைத்தாராம். அதன் பிறகு எப்படியோ விஜயகுமார், மஞ்சுளா திருமணம் நடந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் கூட எம்ஜிஆர் நடிகைகளை தன்னுடனே அழைத்துக் கொண்டு செல்வாராம்

இதெல்லாம் அவர்களுடைய பாதுகாப்புக்காக தான் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் எம்ஜிஆர் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதால் அதை யாரும் தவறு என்று கூட சொன்னது கிடையாது. அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க கூடாது என்பதற்காக லதாவை எம்ஜிஆர் நாடு கடத்தியது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Also read: தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்

- Advertisement -

Trending News