எம்ஜிஆர் அரசியலில் வெற்றி பெற்றது இப்படிதான்.. ரஜினியால் வெற்றிபெற முடியாததற்கு காரணம் இதுதான்

பொதுவாக ஏதேனும் ஒரு துறையில் இருப்பவர்கள் பிரபலம் அடைந்து விட்டால் அவர்களின் நிலை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். ஆனால் அந்த நகர்வு அவர்களின் துறையை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால் அதில் பல சர்ச்சைகளும் வரும்.

அந்த வகையில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சினிமாவில் கொடிகட்டி பறப்பவர். ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். அவரின் ஸ்டைலும், நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பாராட்டப்பட்டது.

இருந்தபோதிலும் ரஜினியின் அரசியல் வாழ்க்கை அந்த அளவிற்கு இல்லை. ரஜினியின் குணாதிசயங்களும் அவரின் செயல்பாடுகளும் அரசியலுக்கு ஏற்றது இல்லை, என்று அவருடைய நலம் விரும்பிகள் பலர் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரஜினி அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கு காரணமாக இருந்தது. சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்களின் நீண்டநாள் ஏக்கத்திற்கு இறுதியாக தற்போது ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர் எம்ஜிஆர் ஜெயலலிதா விஜயகாந்த் போன்றவர்களும் தற்போது கமலஹாசனும் அரசியலில் ஈடுபட்டு உள்ளார் ஆனால் ரஜினியின் குணாதிசயத்தை அரசியல் ஏற்றதல்ல என்று செய்திகள் வந்துள்ளன ரஜினி எம்ஜிஆரை போலவே மக்களின் மனதில் பதிந்தவர் ஆனால் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் முற்றிலும் மாறுபட்டது.

எம்ஜிஆரின் திரைப்பட பிம்பம் அரசியலை முன்னெடுத்து இருந்தது. ஆனால் ரஜினி அவ்வாறு இல்லை பல வேடங்களில் பல கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். ஆகையால் ரஜினி தற்போது அரசியலில் இருந்து விலகி சினிமா துறையில் மட்டுமே தொடர்ந்து இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்