பலவருட சண்டையை முடிவுக்கு கொண்டு வந்த தமிழிசை.. நட்பை புதுப்பித்து எம்ஜிஆர், கருணாநிதி

எம்ஜிஆர், கருணாநிதி, பெரியார் ஆகிய மூவரும் இணைந்து தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தனர். ஆனால் இடையில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

அதோடு சில கணக்கு வழக்குகள் தொடர்பாகவும் அவர்களுக்குள் மனவருத்தம் ஏற்பட்டது. இதனால் எம்ஜிஆர் அந்த கட்சியை விட்டு பிரிந்து தனியாக வந்தார். இவர்களை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைத்து பெரியார் செய்த அத்தனை முயற்சிகளும் வீணாக போனது.

எம்ஜிஆர் பெரியாருக்காக மனம் இறங்கினாலும் தன்னுடைய ரசிகர்களுக்காக அந்த முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்தார். பின்னர் மக்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் அவர் அதிமுக கட்சியை ஆரம்பித்தார். அதன்பிறகு கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக மாறினர்.

அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடும் போகப்போக அதிகமானது. இதனால் அவர்களுடைய நட்பு இனி தொடரப் போவதில்லை என்று அனைவரும் நினைத்தனர். அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. அதாவது எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் ஒரு திருமண விழாவில் சந்திக்க நேரிட்டது.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் குமரி அனந்தன். இவர் பெருந்தலைவர் காமராஜர் உடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். இவருடைய மகளின் திருமணத்திற்கு தான் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி இருவரும் வந்திருந்தனர்.

நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்ட இருவரும் தங்கள் சண்டையை மறந்து மனம்விட்டுப் பேசி மீண்டும் நட்பை தொடர்ந்தனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்.

குமரி அனந்தனின் மகளான அவருக்குத்தான் அன்று திருமணம் நடந்தது. அந்த விழாவில்தான் எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் ஒன்று சேர்ந்தனர். ஒரு வகையில் அந்த இரு துருவங்களை சேர்த்து வைத்த பெருமை தமிழிசை சவுந்தரராஜனுக்கு உண்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்