எம்ஜிஆர் கெட்டப்பில் அஜித்.. இணையத்தில் சூடு பிடிக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

நடிகர் அஜீத் குமாருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் இதனை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஒரு பக்கம் போஸ்டர் மற்றொரு பக்கம் கொண்டாட்டம் என குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. சமீப நாட்களாக இப்படத்தை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனால் போனிகபூர் இப்படம் பக்கா கமர்ஷியல் என தகவலை வெளியிட்டார்.

mgr ajith kumar
mgr ajith kumar

அஜித்குமார் பிறந்த நாள் என்பதால் இன்று படத்தின் அப்டேட் ஏதாவது ஒன்று வெளியாகும் அதாவது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படக்குழுவினர் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

அதற்கு காரணம் படத்தின் தகவல் ஏதாவது வெளியிட்டால் ரசிகர்கள் கூட்டமாக கொண்டாடுவார்கள். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் படத்தின் தகவலை வெளியிடவில்லை.

ஆனால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா அஜித் பிறந்தநாள் என்பதால் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் தேசிய நாயகன் என மகுடம் சூட்டியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்