முதல் முறையாக 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான எம்ஜிஆர் படம்.. இப்ப அதோட மதிப்பு பல கோடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் எம்ஜிஆர். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அப்போது எம்ஜிஆர் நடித்த படங்கள் என்றாலே அதற்கு தனி வரவேற்பு இருக்கும். இதனாலேயே பல நடிகர்களின் படங்களும் வெளியாவதற்கு தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவார்கள்.

எம்ஜிஆர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் அதிலும் குறிப்பாக இவர் செய்யும் சண்டை காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமையும். அப்போதெல்லாம் எம்ஜிஆரின் படங்கள் என்றாலே ஆக்ரோஷமான வசனங்களும், சண்டைக் காட்சிகளும் கண்டிப்பாக இடம்பெறும். ஏனென்றால் ரசிகர்கள் பிடித்ததே இதுதான்.

அதன் பிறகு எம்ஜிஆர் தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களும் தனது கட்சியை பற்றிய வசனங்கள் ஏதாவது ஒரு காட்சியில் வைத்திருப்பார். இது பிற்காலத்தில் எம்ஜிஆர் அரசியல் வருவதற்கு பக்கபலமாக அமைந்தது. அப்போது எம்ஜிஆருக்கு பெருவாரியான ரசிகர்கள் இருந்தனர். அதனாலேயே பல இயக்குநர்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் காட்சிகளை மட்டுமே படமாக்கினர்.

mgr-biopic-tamil-movie
mgr-biopic-tamil-movie

எம்ஜிஆர் நடிப்பில் உருவான அடிமைப்பெண் திரைப்படத்தில் ஜெயலலிதா, சோ மற்றும் ஆர்.எஸ் மனோகர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் படத்தின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. பின்பு 50 லட்சத்திற்கு அடிமைப்பெண் படம் உருவானது. அதிக பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

எம்ஜிஆர் நடிப்பில் பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ஆனால் அடிமைப்பெண் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது. பின்பு எம்ஜிஆர் நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் அதிகப்படியான பட்ஜெட்டில் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்