எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றாத கமல்.. 50 வருடங்களுக்குப் பின் நிகழ்ந்த சம்பவம்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் நீண்ட காலமாக பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார். அதற்காக பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இயக்குனரிடமும் தன்னை வைத்து எப்படியாவது பொன்னின் செல்வன் படத்தை இயக்குமாறு கோரிக்கையையும் வைத்தார். ஆனால் கடைசிவரை எம்ஜிஆரால் பொன்னின் செல்வன் படத்தில் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை கமல்ஹாசன் வைத்து எடுக்கத் திட்டமிட்டு இருந்தார். ஏனென்றால் இப்படத்தில் கமல்ஹாசன் தவிர மற்ற எந்த ஒரு நடிகராலும் கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி  நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து எம்ஜிஆர் கமல்ஹாசன் வைத்து வந்தியதேவன் கதாபாத்திரத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் கமல்ஹாசனால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியவில்லை. கடைசிவரை எம்ஜிஆர் மற்றும் கமலஹாசன் இருவருமே படத்தை எடுப்பதற்கு முடிவு செய்தார்களே தவிர படப்பிடிப்பு நடத்துவதற்கான முயற்சியில் இறங்கவில்லை.

ஆனால் மணிரத்னம் நீண்ட வருடங்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனைத்து கதாநாயகர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள நடிகரின் கதாபாத்திரத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் நடிக்க இருந்த வந்தியதேவன் கதாபாத்திரத்தில் தான் கார்த்திக் நடித்துள்ளார். ஏனென்றால் இப்படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரம்தான் மிகவும் சவாலான கதாபாத்திரம் என கூறியுள்ளனர். கமல்ஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு தனது நடிப்பினை அசால்டாக வெளிப்படுத்துவார்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் கார்த்தி எப்படி நடித்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. மேலும் கார்த்திக் மேல் இருக்கும் நம்பிக்கையை விட மணிரத்தினத்தின் மேல் தான் ரசிகர்கள் அதிகமான நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் இவர் தன்னுடைய படத்திற்கு தேவையான நடிப்பை மற்ற நடிகர்களிடம் வாங்கிவிடுவார். அதனால் கார்த்திக்கிடம் சிறந்த நடிப்பை வாங்கி இருப்பார் என கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -