சினிமாவின் ஆரம்ப காலத்தில் சூரி போல் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த எம்ஜிஆர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு நடிகரும் எடுத்த உடனே மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது திறமைகள் மூலமே பல நடிகர்கள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன.

அந்த மாதிரி தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது கொடி கட்டிக் கொண்டிருக்கும் நடிகர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர்.

அன்றைய காலத்தில் சூப்பர் ஹீரோவாக இருந்த எம்ஜிஆர் கூட சினிமாவில் வந்த உடனே தமிழ் ரசிகர்கள் அவரை கொண்டாடவில்லை காலப்போக்கில் அவரது நடிப்பும் பின்பு மக்கள் உதவிய குணத்தின் மூலம் தமிழ் மக்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

mgr
mgr

எம்ஜிஆர் பொறுத்தவரை நமக்கு அவர் ஹீரோவாக பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் சினிமாவில் நுழைவதற்காக மற்ற நடிகர்கள் போலவே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சினிமாவில் நுழைவதற்கு எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு முதலில் அவருக்கு கிடைத்த சதிலீலாவதி என்ற படத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகுதான் இவர் ஹீரோவாக பல படங்கள் நடித்துள்ளார்.

இதுபோல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இவ்வளவு ஏன் சூரி முதல் அஜித் வரை பலரும் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு கிடைத்த சின்னச் சின்ன கதாபாத்திரம் மூலம் நடித்து தான் தற்போது உயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்