கணவர் செய்த துரோகம், பறிபோன 100 கோடி சொத்து.. நடுத்தெருவில் தவித்த மெட்டிஒலி நடிகை

Metti Oli: சன் டிவியில் சித்தி சீரியலுக்கு பிறகு மிகப்பெரும் வெற்றி அடைந்த சீரியல் என்றால் அது மெட்டிஒலி தான். அதில் நடித்த நடிகை ஒருவர் தன் வாழ்க்கை பக்கங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த வகையில் அந்த சீரியலில் ராஜம் என்ற கேரக்டரில் கொடுமைக்கார மாமியாராக வருபவர் தான் சாந்தி வில்லியம்ஸ். அந்த காலகட்டத்தில் அவரை திட்டி தீர்க்காத பெண்களே கிடையாது.

ஏகப்பட்ட சீரியல்கள், படங்கள் என பிசியாக இருக்கும் அவர் தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய கணவர் தனக்கு இழைத்த துரோகம் பற்றியும் பகிர்ந்து உள்ளார்.

புகழ்பெற்ற கேமரா மேன் வில்லியம்ஸ் இவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அப்போது 20 வயதான சாந்திக்கு 46 வயதான இவரை பிடிக்கவே இல்லையாம்.

அதனால் திருமணத்திற்கு மறுப்பு சொல்லி இருக்கிறார். ஆனாலும் விடாத வில்லியம்ஸ் பில்டிங் மேல் ஏறி நின்று கீழே குதித்து விடுவேன் என மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

நடுத்தெருவில் தவித்த சாந்தி வில்லியம்ஸ்

இப்படி அவரை திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் கணவருக்கு கார்மேல் அதிக பிரியம் என்பதால் ரக ரகமாக கார்களை வாங்கி குவிப்பாராம்.

அதை பராமரிக்கவே சில சொத்துக்களையும் விற்றுள்ளார்கள். அதேபோல் படம் எடுக்கிறேன் என்று போய் நஷ்டத்தை சந்தித்து கையில் இருந்த சொத்தும் போயிருக்கிறது.

இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு கோடி விலை போகும் ஒரு வீட்டை கடனுக்காக வித்து விட்டார்களாம். அதன் பிறகு குழந்தைகளோடு நடுத்தெருவில் இருந்த சாந்தி கஷ்டப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்.

ஆனால் கணவர் செய்த துரோகத்தால் அவருடன் 18 ஆண்டுகள் பேசாமலேயே வாழ்ந்திருக்கிறார். இப்படி பல துயரங்கள் அடைந்த அவர் இப்போதும் உழைத்து கொண்டுதான் இருக்கிறார்.

அது பற்றி கூறியிருக்கும் அவர் அப்போது பிள்ளைகளுக்காக சம்பாதித்தேன். இப்போது பேரப்பிள்ளைகளுக்காக சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான் என் வாழ்க்கையில் இருக்கும் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்