திடீர்னு கட்டிப்புடிச்சு, முத்தம் கொடுத்துட்டார்.. புகாரில் சிக்கிய பிக் பாஸ் பெண் போட்டியாளர்

BB7 Tamil Contestants: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறினார். கடந்த வாரம் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் நேற்று பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

பிரதீப்பின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளில், கமலஹாசன் அழுத்தி சொன்னது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தான். இதை பார்வையாளர்கள் பலர் வன்மையாக கண்டித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு குற்றச்சாட்டு பிரதீப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் செய்த விஷயம் வெளியாகி இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் இனி பிரதீப் வீட்டிற்குள் வரமாட்டார் என்று சொல்லி இருந்தார். அப்போது பூர்ணிமா, மாயா, ஜோவிகா ஆகியோர் பலமாக கைதட்டினார்கள். மாயாவை ஏற்கனவே பார்வையாளர்கள் பலருக்கு பிடிக்காத நிலையில், அவருடைய பழைய வழக்கு ஒன்றை தோண்டி எடுத்து சமூக வலைத்தளத்தின் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Also Read:பிரதீப்பை வெளிய அனுப்பலனா, நா ஷோ விட்டு போயிடுவேன்.. விஜய் டிவியை எச்சரித்த கமல்

கடந்த 2018 ஆம் ஆண்டில் அனன்யா ராம் பிரசாத் என்னும் மாடல் நடிகை மாயா மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் மாயாவை தனக்கு 2016 ஆம் ஆண்டிலிருந்து தெரியும் எனவும், இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார். மாயா நாட்கள் செல்ல செல்ல அனன்யாவை அவருடைய நண்பர்களிடம் பேசக்கூடாது, பெற்றோர்களிடம் பேசக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன் போட்டிருக்கிறார்.

இப்படி நட்பில் உரிமை எடுத்துக் கொண்ட மாயா ஒரு நாள் அனன்யாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும் சொல்லி இருக்கிறார். இதனால் மாயாவின் நட்பை அனன்யா முறித்துக் கொண்டாராம். மேலும் மாயா அனன்யாவின் நண்பர்களிடம் அவரைப் பற்றி தவறுதலாக சொல்லி இருப்பதாகவும், அப்போதுதான் தான் ஒரு மோசமான உறவில் சிக்கியிருந்தது தெரியும் எனவும் புகார் கொடுத்திருக்கிறார்.

இது பற்றி விளக்கம் கொடுத்த மாயா, அனன்யா தன்னை பற்றி தவறாக சொல்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் வக்கீல் இதை பார்த்துக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். அப்போது நியூஸ் பேப்பரில் வெளியாகி இருந்த இந்த செய்தியை இணையதள வாசிகள் சமூக வலைத்தளத்தில் நேற்றிலிருந்து ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Also Read:நியாயமில்லாத பிரதீப் எவிக்சன்.. ஆண்டவரின் லீலைகளை அவிழ்த்து விடும் நெட்டிசன்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்