நிச்சயம் முடிந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய சுசீந்திரன் பட நடிகை.. எல்லாத்துக்கும் இதுதான் காரணமா?

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான மெஹ்ரீன் தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவை தவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவருக்கும் பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், பாவ்யா பிஷ்னோய்க்கும் எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என மெஹ்ரீன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “நானும் பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது. எங்கள் திருமணம் நடைபெறாது. இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்தே எடுத்துள்ளோம். இருவரின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

mehreen pirzada
mehreen pirzada

அவருக்கு என் இதயத்தில் இன்னும் மரியாதை இருக்கிறது. ஆனால், இனி பாவ்யாவுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்வித தொடர்பும் இருக்காது. பாவ்யா தொடர்பாக இந்த ஒரே ஒரு அறிக்கையை மட்டுமே நான் வெளியிடுகிறேன்” என மெஹ்ரீன் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானாவுக்கு மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன்தான் பாவ்யா பிஷ்னோய் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -