வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கமலையே டீலில் விடும் மெகா ஸ்டார்.. ஓஹோ! கதை அப்படிப் போகுதா?

கமல் விக்ரம் படத்தை தொடர்ந்து மலையாள நடிகர் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார். இந்நிலையில் இப்படத்தில் பல திரை நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக நடிப்பு அரக்கர்கள் பலரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். ஒருவேளை விக்ரம் படத்தில் நடித்த அதே கூட்டணியை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது. ஆனால் கமலுக்கு இணையான ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே கமல் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக கேரளா வந்தபோது, நான் மோகன்லாலுடன் நடித்த விட்டேன் மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்தார். இந்நிலையில் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மெகா ஸ்டார் மம்முட்டியை நடிக்கவைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் மம்முட்டி சம்மதம், மறுப்பு என எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து கமலை டீலில் விட்டு வருகிறாராம். ஏனென்றால் இருவருமே நடிப்பு அசுரர்கள் என்றே சொல்லலாம். நடிப்புக்காக தங்களை சினிமாவில் அர்ப்பணித்துள்ளனர்.

இதனால் இவர்கள் இருவருமே ஒரே படத்தில் நடித்தால் யாருக்கு பாராட்டு கிடைக்கும் என்பதில் ஒரு சுயநலம் இருக்கிறதாம். இதனால்தான் மம்முட்டி இன்னும் முடிவு எடுக்காமல் கமலை அலைக்கழித்து வருகிறாராம். கமல் நீண்ட காலமாக மம்முட்டியுடன் நடிக்க ஆசைப்படுகிறார்.

இதனால் பல இயக்குனர்களிடம் இருவரும் கதை கேட்டு உள்ளனராம். கமல் ஒரு கதையில் சமாதானம் ஆனாலும் கூட வேறு நல்ல கதை வரும் அப்போது நடித்து கொள்ளலாம் என மம்முட்டி கூறி விடுவாராம். இதனால் கமலின் ஆசை இந்த படத்திலாவது நிறைவேறுகிறதா என்பது விரைவில் தெரியும்.

- Advertisement -

Trending News