கூடிய சீக்கிரத்தில் CM ஆகிடுவேன்.. அலப்பறையை ஆரம்பித்த மீரா மிதுன்

meera-mithun

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வர வேண்டிய என்னை வேலை செய்ய விடாமல் முன்னணி நடிகர்கள் பலரும் கட்டம் கட்டி தன்னுடைய வளர்ச்சியைக் கெடுத்து வருகின்றனர் என்று கூறிவந்த மீரா மிதுன் தற்போது ஒரு படி மேலே போய் சிஎம் ஆக வேண்டும் என கூறியுள்ளது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

மீரா மிதுன் பற்றி பெரிய அளவு சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. அவருடைய செய்கைகள் நடவடிக்கைகள் எல்லாம் ரசிகர்கள் அறிந்ததே. இந்த உலகத்தில் எதையெல்லாம் செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுறுத்துவார்கள் அதையெல்லாம் செய்யும் பெண்மணி தான் அவர்.

சமீபத்தில் கூட ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக பேசி சில நாட்கள் ஜெயிலுக்கு வனவாசம் சென்றிருந்தார். அதன் பிறகு வெளியே வந்த மீரா மிதுன் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் சும்மா இருந்த வரை சரிந்து விட்ட கதையாக ஒரு சில யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்து மீண்டும் உலவ விட்டுள்ளனர்.

இதுவரை நடிகர் நடிகைகளின் மனைவிகளையும் அவர்கள் தனக்கு கொடுக்கும் டார்ச்சர் களையும் பற்றி பேசி வந்த மீராமிதுன் சமீபகாலமாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் சிஎம் ஆக வேண்டும் என்றும் ஆசை இருப்பதாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது சத்தியமாக நடக்க வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும். இருந்தாலும் பைத்தியம் போல் எதற்கு இதையெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் என்கிறார்கள் ரசிகர்கள். இதுவரை கண்டெண்ட் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த மீம்ஸ் கிரியேட் அவர்கள் கூட கண்டன்ட் இல்லை என்றாலும் பரவாயில்லை இவரைப் பற்றி பேச மாட்டோம் என சலித்து போய் விட்டார்களாம்.

meera-mithun-cinemapettai
meera-mithun-cinemapettai
Advertisement Amazon Prime Banner