2 நடிகைகளை ஓரங்கட்டி அறிமுகமான மீரா ஜாஸ்மின்.. ரன் படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாலிவுட் ஹீரோயின்

மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய துரு துரு நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தார். சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரன் திரைப்படத்தில் முதலில் வேறு நடிகைகள் தான் நடிக்க இருந்தார்களாம். லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இப்படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்யப்பட்டாராம். அதற்கான போட்டோ ஷூட் கூட நடைபெற்று இருக்கிறது.

Also read: ஆன்ட்டி வயதில் ஹாட்டான புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.. இத அப்பவே செஞ்சிருந்தா இவங்க தான் NO.1 நடிகை

ஆனால் அதில் அவருடைய தோற்றம் கதைக்கு செட் ஆகாமல் இருந்த காரணத்தால் அவர் ரிஜெக்ட் செய்யப்பட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து ரீமாசென் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவரை வைத்து நான்கு நாட்கள் படப்பிடிப்பு கூட நடைபெற்று இருக்கிறது. அது இயக்குனருக்கு திருப்திகரமாக இல்லையாம்.

ஏனென்றால் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் இருந்தாராம். அதனால் இயக்குனர் அவரையும் ரிஜெக்ட் செய்து விட்டு மீரா ஜாஸ்மினை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவருடைய தோற்றமும், நடிப்பும் பிடித்து போனதால் அவர் இப்படத்தில் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

Also read: இயக்குனருடன் நெருக்கமான போட்டோ.. ஷாக் கொடுத்த மீராஜாஸ்மின்

இப்படி அறிமுக படத்திலேயே இரண்டு ஹீரோயின்களை ஓரங்கட்டி இவர் நடிக்க வந்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது. அந்த வகையில் ரீமாசென் ஏற்கனவே மாதவனுடன் மின்னலே திரைப்படத்தில் நடித்திருந்தும் கூட இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இப்படி பார்த்து பார்த்து தயாரான ரன் திரைப்படம் மாதவனுக்கு இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது.

அதேபோன்று மீரா ஜாஸ்மினும் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கடைசியாக இவர் தமிழில் விஞ்ஞானி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து இவர் விமானம் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: ரீ-என்ட்ரி கொடுப்பதால் 13 கிலோ உடல் எடையை குறைத்த மீரா ஜாஸ்மின்.. வைரல் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்