மீரா ஜாஸ்மின் வாழ்க்கையில் புகுந்து விளையாடிய இரண்டு பேர்.. கடைசியில் விவாகரத்தில் முடிந்த வாழ்க்கை!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின்(Meera Jasmine) தன்னுடைய வாழ்க்கையில் எடுத்த இரண்டு தவறான முடிவுகளால் வாழ்க்கையே திசை மாறிப் போனது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிலியாவுக்கு முன்பு தமிழ் சினிமாவில் துருதுருவென ஒரு நடிகை இருக்கிறார் என்றால் அது மீரா ஜாஸ்மின் தான். அவருடைய குழந்தைத்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.

அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார் மீரா ஜாஸ்மின்.

இந்நிலையில் 2008ஆம் ஆண்டு மாண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஓபனாகவே பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பது தெரியவில்லை. திடீரென 2011ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் என்ன பஞ்சாயத்து நடந்தது என்பதை தற்போது வரை வெளிவராமல் மூடி மறைத்துவிட்டார். அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கை 2016ஆம் ஆண்டு வாய்த் தகராறு காரணமாக விவாகரத்து வரை சென்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக மீரா ஜாஸ்மின் வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது 39 வயதைத் தொட்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இனிமேல் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக நண்பர்களிடம் கூறி விட்டு தீவிர உடற்பயிற்சியில் இறங்கி விட்டாராம். அடுத்ததாக மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

தன் வாழ்க்கையில் எடுத்த இந்த இரண்டு தவறான முடிவுகள் வாழ்க்கையின் பாதையை மாற்றி விட்டது என நண்பர் வட்டாரங்களில் புலம்பி கவலைப்படுகிறாராம் மீரா ஜாஸ்மின்.

meera-jasmine-cinemapettai
meera-jasmine-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்