குண்டு பூசணிக்கா மாதிரி இருந்த மீரா ஜாஸ்மினா இது? 2 வருட ஒர்க் அவுட்டுக்கு பிறகு வெளியான ஸ்லிம் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். அதேபோல், மீரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மீராவை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இந்தப்படத்திற்கு பிறகு மீராக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மேலும் மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, துபாயில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீரா ஒர்க்கவுட் எல்லாம் செஞ்சு, உடல் எடையை குறைத்து ஒல்லியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் இரண்டு வருடத்திற்கு முன் எவ்வளவு குண்டாக இருந்தாரோ, அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பதோடு அழகிலும் சொக்க வைத்திருக்கிறார்.

meera-jasmine-latest-weightloss-photo-01
meera-jasmine-latest-weightloss-photo-01

விவாகரத்தால் தடம்புரண்ட மீராஜாஸ்மின் வாழ்க்கையை மீண்டும் தன்னுடைய சினிமாவில் இருந்து தொடங்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் அடுத்ததாக மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.

meera-jasmine-latest-weightloss-photo
meera-jasmine-latest-weightloss-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்