18 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய மீரா ஜாஸ்மின்.. சூடேற்றும் போட்டோவால் திணறிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். அதேபோல், மீரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு  ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி திரைப்படம் மீராவை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இந்தப்படத்திற்கு பிறகு மீராக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மேலும் மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, துபாயில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீராஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீரா ஒர்க்கவுட் எல்லாம் செஞ்சு, 18 கிலோ வரை உடல் இடையை குறைத்து ஒல்லியான  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மீரா ஜாஸ்மின் இரண்டு வருடத்திற்கு முன் எவ்வளவு குண்டாக இருந்தாரோ, அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக  இருப்பதோடு அழகிலும் சொக்க வைத்திருக்கிறார்.

MeeraJasmine
MeeraJasmine

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த மீரா ஜாஸ்மினின் ரசிகர்கள் பலர், ‘நீங்க நடிக்க வந்தாலும் தப்பில்லை’ என்று  கமெண்ட் செய்து வருகின்றனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்