உன் வீடுனா இஷ்டத்திற்கு பேசுவியா? SJ சூர்யா பட நடிகைக்கு நேர்ந்த கொடுமை

ஆசை ஆசையாய் சுமார் 17 இலட்சத்திற்கு வீட்டை அழகழகாக மாற்றி வந்த நடிகையை அந்த வீட்டில் வேலை செய்பவர் மிரட்டி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை ஆளுக்கு இவ்வளவு தைரியமா எனும் அளவுக்கு கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே போன்ற சில பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா. இவரது உண்மை பெயர் மீரா சோப்ரா. தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவுக்கு காணாமல் போன சில நடிகைகளில் இவரும் ஒருவர். அப்படி இருந்த போதிலும் தற்போது ஹிந்தியில் இவருக்கு சில பல பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலும் இப்போது ஹிந்தியில் வெப்சீரிஸ் போன்றவை அதிகமாக எடுக்கப்படுவதால் அதில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் வந்த பணத்தை வைத்து தான் சமீபத்தில் தன்னுடைய வீட்டை சுமார் 17 லட்சம் செலவில் வீட்டிற்குள் இருக்கும் இன்டீரியர் டிசைன் களை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக ஒரு டிசைனர் இடம் சுமார் 17 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி வந்த அந்த வீட்டிற்கான பாதி பணத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டாராம்.

இந்த நடிகையை பார்த்து நன்றாக ஏமாற்றலாம் என முடிவு எடுத்த அந்த நபர் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி வீட்டை வேலை செய்து வந்துள்ளார். இதை கவனித்த மீரா சோப்ரா அந்த நபரை திட்டித் தீர்க்க கோபமடைந்த அந்த நபர் மீரா சோப்ரா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாராம்.

meera chopra
meera chopra

சொந்த வீட்டில் இருந்தே தன்னை வெளியே அவமானப்படுத்தி துரத்தி விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் மீரா சோப்ரா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெலுங்கு சினிமாவில் தேவையில்லாமல் வாய்விட்டு ஒரு பிரச்சனையில் மீரா சோப்ரா சிக்கிக் கொண்டார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்