நடிப்பு வரலனா அடிக்கும் நடிகருக்கு ஜோடியாக மீனா.. 60 வயதில் கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறல!

சினிமாவைப் பொருத்தவரை பல நடிகைகளுக்கு வயது ஏறினாலும் அவர்களது மார்க்கெட்டுக்கு எந்த குறையும் வராமல் தங்களை அழகாக பார்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் முதலிடம் மீனாவுக்கு தான்.

கண்ணழகி மீனாவாக தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் செட்டிலானார். அவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

மீனாவின் மகள் நைனிகா விஜய் நடித்த தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்த அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மகள் சினிமாவில் நடிப்பதை பார்த்து மீனாவுக்கு ஆசை வந்துவிட்டதா என்பது தெரியவில்லை. மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஓரளவு வயதான நடிகர்களுக்கு சரியான ஜோடியாகவும் மீனா செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் மீனா மற்றும் மோகன்லால் கூட்டணியில் திருஷ்யம் 2 படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைப்போல் அதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனா நடித்து வருகிறார். மீனாவுக்கு அப்போதிலிருந்தே தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

அந்தவகையில் மீண்டும் 21 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவின் டெரர் நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். பாலகிருஷ்ணா படம் என்றாலே நடிகைகள் முதல் துணை நடிகர்கள் வரை அனைவரும் பயப்படுவார்கள். அதற்கு காரணம் தனக்கு கோபம் வந்து விட்டால் யார் எவர் என்று பார்க்காமல் அறைந்து விடுவார் என்பது தான். மீனாவும் பாலகிருஷ்ணாவும் கடைசியாக 1999 ஆம் ஆண்டு ஜோடியாக நடித்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

meena-cinemapettai
meena-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்