தன்னுடைய பெருமை பாட பல லட்சம் சம்பளம் வாங்கிய கண்ணழகி.. மீனாவை வைத்து ரஜினிக்கு வீசிய வலை

90 கால கட்ட சினிமாவை கலக்கிய ஹீரோயின்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்த நடிகை என்றால் அது மீனாவாக தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். இப்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை.

அதனாலேயே பிரபல சேனல் இவரை வைத்து ரஜினியை வளைத்து போட்டு கல்லா கட்டியிருக்கிறது. அதாவது சமீபத்தில் மீனா திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மீனாவுக்கு நெருக்கமான அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

Also read: கமலை போல் மாறத் துடிக்கும் ரஜினி.. விக்ரம் படத்தால் இப்படி ஒரு மாற்றமா?

அது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் மீனா குறித்த பல விஷயங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் என்றால் அது சூப்பர் ஸ்டாரின் வரவு தான். திடீரென அரங்கத்திற்குள் தனக்கே உரிய பாணியில் என்ட்ரி கொடுத்த ரஜினி பேபி மீனா, ஹீரோயின் மீனாவாக மாறியது வரை அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அவருடைய அந்த பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டாரின் வருகை தான் அந்த நிகழ்ச்சியையே வேற லெவலில் வெற்றி பெற வைத்தது. மேலும் இவ்வளவு பிஸியான நேரத்திலும் ரஜினி எப்படி வர சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. உண்மையில் இது சேனலின் மாஸ்டர் பிளான் தான்.

Also read: உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

எப்படி என்றால் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முதலில் மீனா சம்மதிக்கவே இல்லையாம். அதன் பிறகு எவ்வளவோ சமாதானப்படுத்தி தான் அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கின்றனர். அப்போதும் கூட மீனா 2 மணி நேரம் தான் பங்க்ஷன் நடக்க வேண்டும் என்றும் தன்னுடைய பெருமை பாட 13 லட்சம் பேமெண்ட் கொடுக்க வேண்டும் எனவும் பேரம் பேசினாராம்.

அதைத்தொடர்ந்து சேனல் நிர்வாகம் நீங்களே சூப்பர் ஸ்டாருக்கு போன் செய்து இன்வைட் செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். அதன் பிறகு அனைத்தும் வேகவேகமாக நடக்கவே சேனல் தரப்பும் மீனா கேட்ட அந்த பணத்தையே கொடுத்திருக்கிறார்கள். இப்படி கண்ணழகியை வைத்து ரஜினியை வளைத்து போட்ட சேனல் அந்த நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் லாபத்தையும் பார்த்து விட்டது.

Also read: தேடி போய் கால்ஷீட் கொடுத்தும் தட்டி கழித்த பிரபல நிறுவனம்.. ரஜினி விரித்த வலையில் சிக்கிய முன்னாள் மருமகன்

- Advertisement -spot_img

Trending News