ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மனவலியுடன் மீனா போட்ட பதிவு.. இந்த மாதிரியா செய்வீங்க!

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது மீனா கணவர் வித்யாசாகரின் மறைவு. அதாவது கோவிட் தொற்று மற்றும் புறா எச்சத்தால் அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க மீனா மற்றும் அவரது கணவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அவருடைய உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்குப் பிறகு மீனா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த சில படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் மீனாவின் குழந்தை நைனிக்கவும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் சினிமாவில் நடிப்பது வித்யாசாகருக்கு பிடிக்காததால் மீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனக் கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தற்போது மீனா மிகுந்த மன வலியுடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது தன்னுடைய அன்பான கணவரை இழந்து தற்போது நான் மிகவும் வருத்தத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். எங்களது தனியுரிமைக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழ்நிலையிலும் தவறான செய்தியை பரப்புவதை நிறுத்தங்கள். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவியாக இருந்த நல்லுள்ளங்களுக்கு மிகுந்த நன்றி. மேலும் முதல் அமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், நண்பர்கள், உறவினர்கள், ஊடகங்களுக்கு மற்றும் பிரார்த்தனை செய்த என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மீனா பதிவிட்டிருந்தார்.

Meena

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரது மனதை வருத்தும் வழியாக பல செய்திகள் வெளியானதால் இந்த பதிவை மீனா பதிவிட்டுள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி மீனாவின் இல்லத்திற்கு சென்று வித்யாசாகரின் உருவப்படத்திற்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

- Advertisement -

Trending News