தயவுசெய்து இதெல்லாம் சாப்பிடாதீங்க.. மீனா வீட்டு வாசலில் வருந்திய மன்சூர் அலிகான்!

மீனாவின் கணவர் உயிரிழந்ததையடுத்து இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான் மீனாவின் வீட்டிற்கு சென்று வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மீனாவின் கணவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜினமோட்டோ போன்ற உப்பு பொருட்களை உணவில் சேர்க்காமல் உண்ண வேண்டும் என்றும் இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவில் இது போன்ற உணவுகளை தடை செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விதைகள் இல்லாமல் பல காய்கறிகள், பழங்கள் நம் நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. அதையும் நாம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம். இதனை எல்லாம் சாப்பிடாமல் நாம் தடுத்தால் சிறிய வயதில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் மிகக் கொடூரமான ரசாயன உணவுகளையும், இரசாயன கலவைகளையும் பெரும்பாலான நம் அனைத்து வீடுகளிலும் நாம் சமைத்து கொண்டிருக்கிறோம் என்றும் மேலும் அனைத்து வகை பச்சை காய்கறிகளும் உரங்கள் ஏற்றப்பட்டு, டன் கணக்கில் மலடாக்கபட்ட உணவுகளை தான், நாம் தற்போது சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் என மன்சூர் அலிகான் தெரிவித்தார்

எனவே இது போன்ற காய்கறிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிக்கையாளர்களும், பல இயக்கங்களுக்கும், தமிழக அரசிற்கும் வேண்டுகோள் விடுப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடலுக்கு பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -