ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மீனாவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.. தொலைபேசித் தொடர்பு கொண்ட ரஜினி

நடிகை மீனா பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், வித்யாசாகர் காலமாகியுள்ளார்.இதனிடையே பலரும் மீனாவின் கணவரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை திரைப் பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் என்ஜினியரான வித்யாசகரை மீனா திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் உரிய சிகிச்சை பெற்று குணமடைவதாகவும் மீனா தெரிவித்திருந்தார்.

அதன் பின் அனைவரும் குணமடைந்த நிலையில், மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வித்யாசாகர் சிகிச்சை பெற்றுவந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

மீனாவின் கணவர் வித்தியாசாகர் உயிர் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் விதமாக, சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம் தனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தத் துயரத்திலிருந்து கூடிய விரைவில் மீண்டு வரவும், வித்யாசாகரின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளிடம் பிரார்த்திப்பதாக பதிவிட்டிருந்தார்.

மேலும் மீனாவின் தோழியும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், காலை எழுந்தவுடன் மனம் உடையும் இந்த செய்தியை கேட்டு நான் வருந்துகிறேன். பல நாட்களாக நுரையீரல் பாதிப்பால் வித்யாசாகர் அவதிப்பட்டு இருந்த நிலையில், அவரது இழப்பு மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

மேலும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் மீனாவை அழைத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். முடிந்தால் நேரில் வந்து பார்க்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கிறார், அதேபோல் மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டாராம். மீனாவின் கணவரின் உயிரிழப்பு, அவரது ரசிகர்களுக்கும், திரை பிரபலங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Trending News