44 வயதிலும் கீர்த்தி சுரேஷுற்கு சவால்விட்ட மீனா.. லைக்ஸ் அள்ளிக் குவிக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து அனைத்து ரசிகர்களுக்கும் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. அந்த காலகட்டத்தில் நடிகை மீனாவுடன் ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போடுவார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு இவரது அழகை பார்த்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் நடிகர்களும் விழுந்து விட்டனர் என்று தான் கூற வேண்டும்.

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான திரைப்படம் தம்பிக்கோட்டை ஆனால் தமிழைத் தவிர்த்து மலையாளத்திலும், தெலுங்கிலும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை மீனா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாகி உள்ளன. ஒன்று மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் திரைப்படமும், ரஜினியுடன் நடித்த அண்ணாத்த திரைப்படமும். திரிஷ்யம் திரைப்படம் முழுமையாக முடிவடைந்துள்ளது. ஆனால் அண்ணாத்த திரைப்படம் ரஜினியின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடிகை மீனா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி, கன்னட நடிகர் கிச்சா சுதீப், மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய நடிகர்களுக்கு ஒரு சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளார்.

meena
meena

அதாவது அண்ணாத்த திரைப்படத்தில் மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளதால் கீர்த்தி சுரேஷ் சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளார். இந்த சேலஞ்ச் பெயர் க்ரீன் இந்தியா சேலஞ்ச். அதாவது அனைவரும் அவரது வீட்டில் மரக்கன்று நடுவது தான் இந்த சேலஞ்ச் முக்கிய நோக்கமாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்