வெறித்தனமாக இறுதி கட்டத்தை நோக்கி நகரும் மௌன ராகம் 2.. உண்மையை உடைக்க போகும் சக்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது முன்னிலையில் இருக்கக்கூடிய நாடகம் மௌனராகம் 2. இதன் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவைவிட விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் வருணின் தாயார் இறந்து விட்டதாக கதையை கொண்டுவந்த நிலையில் அதிரடியாக ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதில் சற்று யாரும் எதிர்பாராத விதமாக இப்போது வருணின் தாயார் உயிருடன் இருப்பதாக கதை கொண்டு வருகிறார்கள். இது மக்களிடத்தில் அதிகமான சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also read: இந்த வாரம் பிக் பாஸில் என்ட்ரி தர போகும் பிரபலம்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பொதுவாக எல்லா சீரியல் டைரக்டரும் கதையை ஜவ்வு மாதிரி தான் இழுத்து கொண்டு போவார்கள். ஆனால் இந்த நாடகத்தின் டைரக்டர் அதிரடியாக கதையை மக்கள் எதிர்பார்த்தபடியே கொண்டு போகிறார். அதுவும் இந்த கதையின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. இப்போது வருணின் அம்மாவுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு கூட்டி வருகிறார்கள்.

ஆனால் வருணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவன் அம்மாவை பார்த்து பயந்து விடுகிறான். இவரை குணப்படுத்தும் விதமாக சக்தி அதிரடியாக ஒரு முயற்சி செய்து அவனை குணப்படுத்துகிறாள். அடுத்தகட்டமாக வருண் மற்றும் சக்தி இருவரும் அவன் அம்மாவிடம் பழைய நிகழ்வுகளை விசாரித்து வருகிறார்கள்.

Also read: 2023-லும் உருட்டும் பாரதிகண்ணம்மா.. அப்பனா இப்ப முடிக்க மாட்டாங்களா

இதை கேட்ட ஸ்ருதி பயத்துடன் வெளியே செல்கிறாள். இவளை பின்தொடர்ந்து சக்தியும் செல்கிறாள். பின்பு சுருதி அவள் கிரான்மா, மற்றும் ஷில்பா அவர்களிடம் பேசியதே கேட்கிறாள் சக்தி. அதன்பின் சக்தி வீட்டில் வந்து எல்லோரிடமும் அம்மாவை இத்தனை நாளாக அடைத்து வைத்து துன்புறுத்தியது யார் என்று எனக்குத் தெரியும் என்று ஆவேசமாக சொல்கிறாள் சக்தி. அதற்கு உடனே எல்லோரும் சக்தியிடம் யார் யார் என்று கேட்கிறார்கள்.

அதற்கு சக்தி ஆவேசத்தின் உச்சக்கட்டமாக எல்லாத்துக்கும் காரணம் ஷில்பா ஆண்ட்டி தான் என்று உண்மையை உடைக்கிறாள். இதைக் கேட்ட எல்லாரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ஷில்பா நிலைமை என்னவென்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இதற்கு உடந்தையாக இருந்தது சுருதி தான் என்று தெரியவந்தால் வீட்டில் உள்ளவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று பொருத்திருந்து தான் பார்க்கணும்.

Also read: பிக் பாஸ் 6-ன் நியாயம் இல்லாத 5 எலிமினேஷன்.. இப்போது வரை கொந்தளிக்கும் தனலட்சுமி ஆர்மி

- Advertisement -