பிரமாண்டமாக நடந்துமுடிந்த மாஸ்டர் செஃப் தமிழ்.. 25 லட்சத்தை தட்டிப்பறித்த டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் சன் டிவியில் தமிழ் மொழியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றார்கள்.

மாஸ்டர் செப் 14 போட்டியாளர்கள் கொண்ட ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி நேற்று நிறைவு பகுதியை எட்டியது. இதில் 10 பேர் எலிமினேட் ஆன நிலையில் வின்னி, தேவகி, கிருத்திகா, நித்தியா ஆகிய 4 பேரும் பைனலுக்கு தேர்வாங்கினார்கள். நேற்று நடைபெற்ற மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் மதிப்பெண் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அந்தப் போட்டியில் 60க்கு 54 மதிப்பெண்கள் வாங்கி தேவகி இறுதிச்சுற்றில் டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் 25 லட்சம் பரிசு தொகை தேவகிக்கு வழங்கப்பட்டது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை 53 மதிப்பெண்கள் வாங்கி நித்யாவும், மூன்றாவது இடத்தில் 44 மதிப்பெண்கள் வாங்கி கிருத்திகாவும் பெற்றார்கள். வின்னி 43 மதிப்பெண்கள் வாங்கி நான்காவது இடத்தை பெற்றார்.

மாஸ்டர் செப்பில் டைட்டில் வின்னர் தேவகி விஜயராமன் அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சமையல் மீது ஈடுபாடும் இருந்துள்ளது. தேவகி தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்பு சமையல் மீதுள்ள ஆர்வத்தால் ஐடி வேலையில் இருந்து வெளியேற்றி விட்டார். தன் வீட்டிலேயே கேக் செய்து விற்க தொடங்கியுள்ளார். அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவுடன் தனியாக ஒரு கடை ஆரம்பித்து பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகிறார்.

இதனால் இவருக்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது தேவிகா முதலிடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். அதனால் தேவிகாவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்