உச்சத்தை தொட்ட மாஸ்டர் டிக்கெட் விலை.. கொள்ளையடிக்க களமிறங்கிய தியேட்டர்காரர்கள்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் பட ரிலீஸின் போது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் கனவாக இருக்கும்.

அந்தக் கனவை வைத்து ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும் முதல் நாள் டிக்கெட்டின் விலை அதிகமாக வைத்து விற்பனை செய்வதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். எவ்வளவு பணம் கொடுத்தாவது தலைவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தான்.

இதுதான் தியேட்டர்காரர்களின் மூலதனம். இதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முன்னணி நடிகர்களே பட வெளியீட்டின் போதும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனையாகும். அதுவும் 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடியிருந்தால் சும்மா இருப்பார்களா.

இதோ மாஸ்டர் படத்தின் மூலம் களம் இறங்கிவிட்டார்கள் வசூல் சக்கரவர்த்திகள். மாஸ்டர் படம் வசூல் செய்கிறதோ, இல்லையோ. மாஸ்டர் படத்தை வைத்து வசூல் செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.

master-cinemapettai
master-cinemapettai

ஒரு டிக்கெட்டின் விலை டவுன் தியேட்டர்களில் கிட்டத்தட்ட 5000 வரை விற்கப்படுகிறதாம். இது பெரிய ஆச்சரியமில்லை. இந்த முறை கிராமப்புறங்களில் இருக்கும் திரையரங்குகளில் கூட 1000 முதல் 2000 வரை முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை விற்கப்படுகிறதாம்.

இன்னும் ரிலீஸுக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் மாஸ்டர் பட ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்னும் டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர். இதனை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.

தியேட்டர்காரர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க முதலமைச்சரை சந்தித்த தளபதி விஜய், டிக்கெட் விலை உயர்வைக் கண்டிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்